பக்கம்:தமிழ் லா சுருக்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

பினல் கோட் சுருக்கம்.


கெட்ட எண்ணம்.

4. அனேக குற்றங்களுக்கு - கெட்ட எண்ணம், முக்கியமானதாயிருக்கின்றது - அதாவது - அக்கிரமமாய் ஒருவனுக்கு நஷ்டம் வுண்டுபண்ண வேண்டுமென்றாவது, அல்லது, தானாகிலும் தன்னைச் சேர்ந்தவர்களாகிலும் அக்கிரமமாய் லாபம் அடையவேண்டுமென்றாவது, அல்லது, வேறு எந்த கெட்ட எண்ணத்தோடாவது, குற்றம் செய்யப் பட்டிருக்கவேண்டும். அப்பேர்ப்பட்ட கெட்ட எண்ணமில்லாமல் செய்யப்பட்ட காரியத்தால் யாருக்காவது நஷ்டமுண்டானால் - அந்த நஷ்டத்திற்காக சாதாரணமாய் சிவில் வியாச்சியம் செய்யவேண்டுமேயல்லாமல் - கிரிமினலில் பிராது செய்யக்கூடாது.


பலர் சேர்ந்து குற்றஞ் செய்தல்.

5. அனேகர் சேர்ந்து குற்றம் செய்தபோது - அந்தக் குற்றம் ஒருவனாலேயே நடந்திருந்தபோதிலும், பினால் கோடு 34-வது செக்ஷன்படிக்கி - எல்லோரும் குற்றவாளிகள் ஆகிறார்கள். மேலும் - முதலில் செய்ய நினைத்த குற்றத்தைப் பற்றி வேரெந்த குற்றம் நடந்தாலும், அந்த குற்றமும்கூட எல்லோரும் செய்தவர்களாகிறார்கள்.

இது எப்படி யென்றால் —

சிலர் சேர்ந்து, களவு செய்ய வேண்டுமென்று எண்ணி, ஒரு வீட்டில் பிரவேசிக்கிறார்கள். அதில் இரண்டு பேர் - வீட்டிலுள்ளவர்கள் எதிர்க்கவே, அவர்களை அடித்து, சொத்து யெடுத்துக்கொண்டு போகிறார்கள். களவு, அடித்தல் - இந்த இரண்டு குற்றங்களும் இரண்டுபேரே செய்திருந்தபோதிலும் - எல்லோரும் செய்தவர்களே ஆகிறார்கள். முதலில் எல்லோரும் சேர்ந்து புரப்பட்டபோது, வீட்டிலிருந்தவர்களை அடிக்கவேண்டுமென்கிற எண்ணம் இல்லாதிருந்தபோதிலும் - களவு செய்யும்போது சாதா-