பக்கம்:தமிழ் லா சுருக்கம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பினல் கோட் சுருக்கம்.

3


ரணமாய் நடக்கக்கூடிய காரியமானதால் - அடித்த குற்றம் கூட எல்லோரும் செய்தவர்களாகிறார்கள்.

ஆனால், மேல் சொன்னவர்களில், ஒருவன் மாத்திரம் - ஒரு ஸ்திரீயை பலாத்காரமாய் எடுத்துக்கொண்டு போய், கெடுத்துவிட்டால் - அப்படி கெடுத்த குற்றத்தை அவன் மாத்திரமே செய்தவனாகிறான்.


குற்றத்துக்கு கும்மக்கு செய்தல்.

6. குற்றம் செய்தவனுக்கு மாத்திரமே தண்டனை கிடைக்குமென்றும் செய்வித்தவனுக்கு தண்டனை கிடைக்காதென்றும் அனேகர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி எண்ணிக்கொள்வது சுத்த பிசகு. குற்றம் செய்கிறவன், செய்விக்கிறவன், ஆகிய இரண்டு பேருக்கும், தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

7. ஒருவனைக்கொண்டு, ஏதாவது ஒரு குற்றம் செய்விப்பதற்காக எந்த விதத்தினாலாவது தூண்டி விட்டாலும், அல்லது, எந்த விதத்திலாவது சகாயம் செய்தாலும், அல்லது, அந்த குற்றத்தின் விஷயமாய் ஏதாவது ஏர்ப்பாடுகள் செய்து வேலை நடப்பித்தாலும் - பினல் கோடு.107-வது செக்ஷன்படி கும்மக்கு, அதாவது, உடந்தை குற்றமாகும்.

8. உடந்தையாயிருந்த குற்றம், நடந்தாலும், நடக்காமல் போனாலும், உடந்தையாயிருந்தவன் தண்டிக்கப்படுவான்.

இது எப்படி யென்றால்—

"ஏ" என்பவன், "பீ"" என்பவனை அடிப்பதற்காவது - கொல்லுவதற்காவது, அவன் வீட்டைக் கொள்ளை யிடுவதற்காவது, "சீ" யென்பவனை தூண்டிவிடுகிறான் - "சீ" யென்பவன் அப்படி செய்வதற்கு சம்மதிக்காமல் போனாலும், ஒருவேளை சம்மதித்து அவன் செய்தபிரயத்தினம் கைகூடாமல் போனாலும் - கும்மக்கு செய்ததற்காக - "ஏ" என்பவனுக்கு தண்டனை தப்பாது.