பக்கம்:தமிழ் லா சுருக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4


________________

பினல் கோட் சுருக்கம். 9. குற்றம் செய்தவனுக்கு தண்டனையாகாமல் போன போதிலும், உடந்தையாயிருந்து குற்றம் செய்வித்தவனுக்கு தண்டனையாகாமல் போகாது. இது எப்படி யென்றால் - "ஏ என்பவன் 'பி' என்பவனை தூண்டிவிட்டு ஒரு குற்றம் செய்விக்கிறான். "" என்பவன் ஏழுவயதுக் குக் கீழ்ப்பட்டவனாகவாவது, அல்லது, பைத்தியக் காரனாகவாவது, யிருந்தால், அப்பொழுது அவன் தண்டிக்கப்படமாட்டான். "ஏ என்பவன் மாத்திரம் உடந்தையா யிருந்ததற்காக தண்டிக்கப்படுவான். 10. ஆகையால் - லஞ்சம் கொடுத்தவனுக்கும், வாங் கிக்கொண்டவனுக்கும் - பொய் சாக்ஷி சொன்வனுக்கும், சொல்லிவித்தவனுக்கும் - வியபிசாரம் செய்தவனுக்கும், கூட்டிக்கொடுத்தவனுக்கும் - இருவருக்கும் தண்டனை கிடைக்கும். மேலும், லஞ்சம் வாங்கிக்கொள்வதற்கு அதிகாரி சம்ம திக்காவிட்டாலும், லஞ்சம் கொடுக்கவந்தவனுக்கு சிக்ஷை தப்பாது. அப்படியே, பொய் சாக்ஷி சொல்வதற்கு, சாக்ஷி ஒத்துக்கொள்ளாமற் போனபோதிலும், சொல்லும் படி சொன்னவனுக்கு தண்டனை ஆயிக்கொண்டே யிருக் கிறது. 11. உடந்தையாயிருந்த குற்றம் நடந்தால் - குற்றம் செய்தவனுக்கு எவ்வளவு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிற தோ அவ்வளவு தண்டனை உடந்தையா யிருந்தவனுக்கும் கூட 109 - வது செக்ஷன்படிக்கி விதிக்கப்பட்டிருக்கிறது. 12. உடந்தையாயிருந்த குற்றம் நடக்காமல் போனால் - குற்ற நடந்தபோது விதிக்கப்படும் தண்டனையில் சில பாகமாத்திரமே, அந்த உடந்தைக்கு விதிக்கப்பட்டிருக் கிறது.