பக்கம்:தமிழ் லா சுருக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பினல் கோட் சுருக்கம்.


1860 வருஷத்திய 45 - வது சட்டம்.


குற்றங்கள்.

1. இந்தியன் பினல் கோட் - இந்தியாதேசத்தில் குற்றவாளிகளை தண்டிப்பதற்காக ஏர்ப்படுத்தப்பட்ட சட்டமாயிருக்கிறது.

2. குற்றவாளிகள் - பினல் கோடுப்டிக்கு தண்டிக்கப்படுகிறதுமல்லாமல் - அவாளுடைய குற்றத்தினால் நஷ்டம்டைந்தவர்கள், அவாளின் பேரில் நஷ்டத்துக்காக தாவாவும் செய்யக்கூடும்.

இது எப்படி யென்றால்-.

களவு, மோசம், நம்பிக்கைத்துரோகம், விபசாரம் முதலாகிய குற்றங்கள் நடந்தால், குற்றவாளியின் பேரில் பிராது செய்து, அவனுக்கு தண்டனை செய்விப்பதுமல்லாமல் - அந்த குற்றத்தாலுண்டான நஷ்டத்துக்காக, குற்றவாளியின் பேரில், நஷ்பத்தையடைந்தவன் வியாச்சியமும் செய்துக்கொள்ளலாம்.


பிராதுகள் - வியாச்சியங்கள்.

3. சிவில் விவஹாரம் நடத்தவேண்டிய போது, அனேகர், கிரிமினல் விவகாரத்தை ஆரம்பித்து பிராதுகளை தாக்கல் செய்து வருகிறார்கள். அப்படி செய்வதினால் காலதாமசமாகிறதுமல்லாமல், வீண் சிரமமும் ஆகின்றது. ஆகையால் குற்றங்களின் சுபாவம், இது குற்றம் இது குற்றம் அல்ல - இந்த சங்கதிகளை தெரிந்துக்கொண்டிருப்பது மிகவும் உபயோகமாயிருக்கும்.