பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


8

தமிழ் வள்ர்கிறது!

பெண் கல்வி வேண்டுமென்றே ஒருவர் சொன்னால்

பெரியவளாய் ஆகும்வரை படிப்ப தென்று

தண்டமிழ்க்குப் பண்டிதர்கள் உரைவ குத்த

தந்திரம்போல் மற்றொறாவர் விளக்கம் சொல்வார்.

கண்ணைநிகர் கல்வியினைக் கற்ப தற்கே

கல்லூரி வருமந்தக் கன்னி தன்னை

மண்டுதமிழ் மாணவரோ சுற்றி வந்து

மனமயக்கம் கொண்டிடுவார் மான மின்றி !


தமிழ்நாட்டில் வானொலியை இயக்கு விக்கும்

தனியுரிமை பெற்றவரோ வடமொ ழிப்பேர்

அமைத்ததனை அழைக்கின்றார்; இந்தி தன்னை

அருமுயற்சி செய்திங்கே பரப்பு கினறார்.

சமைத்துவைத்த அறுசுவைசேர் உணவி ருக்கச்

சரக்குதனைக் குடிப்பாட்டும் சழக்கர் போலே

நமைத்துன்பப் படுத்துகின்ற ஆள வந்தார்

நாட்டுமொழி வளர்ச்சியினைத் தடுக்க லானார் !


கொள்ளைகொலை ஆபாசச் செய்தி யென்னும்

குப்பையெலாம் பரப்புகின்ற செய்தித் தாள்கள்

கள்ளமிலா நாட்டினரின் உள்ளங் தன்னைக்

கயமைவழிச் சேர்க்கின்ற கதையி தழ்கள்

வெள்ளம்போல் பெருக்கிரும்பால் விலைப்ப டுத்தி

விந்தையுறத் தமிழ்வளர்ப்ப தாகக் கூறும்

குள்ளர்களும் இந்நாட்டில் பெருகிப் போனார்

குணங்கெட்டார் இவைபடித்தார் நூறு நூறாய் !