பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 தமிழ் வளர்கிறது! ஏனென்று கேட்பதற்கோர் ஆளு மின்றி இருக்கின்ற காரணத்தால் தமிழர் நாட்டில் தானென்று திரிகின்ற போக்குக் கொண்டார் தலைகனத்துத் திரிகின்ற நிலைமை கண்டோம். பேனென்று தலையேறி இருந்து விட்டால் பெருமையுள்ள தாய்விடுமா என்று பார்த்தால். யானென்றும் உயர்ந்தவனென் றெண்ணு கின்ற அவர்நிலைமை யறிந்திடுவார் உண்மை காண்பார்! வள்ளுவனின் மறைவளர்ந்த தமிழர் நாட்டில். வளங்கொழிக்கும் கீழ்க்கணக்கு நூல்க ளாலே உள்ளமெலாம் தெளிவுற்று நெறிகைக் கொண்டே ஒப்பற்ற சான்றேர்கள் வாழ்ந்த நாட்டில், தெள்ளுதமிழ் வளர்கின்ற விங்தை யான சிலநிகழ்ச்சி நாம்கண்டோம். இந்தப் போக்கே கொள்ளுமெனில் இந்நாட்டில் முன்னேற் றத்தைக் கொண்டுவரல் முயற்கொம்பே கண்டீர் ! கண்டீர் ! ஒழுக்கமுடன் வளர்கின்ற பிள்ளை யன்ருே - உயர்ந்தவய்ை விளங்கிடுவான். நடத்தை தன்னில் வழுக்குடைய பேர்வழியும் சிறப்ப துண்டோ ? வான்கோழி மயிலைப்போல் ஆவ துண்டோ? அழுக்குடையோன் நோயின்றி வாழ்தல் உண்டோ ? அழகுடைய தமிழ்கெடுக்கும் அன்ப ரெல்லாம் இழுக்குடைய கொள்கைகளை விட்டு விட்டே என்றும்கல்ல தமிழெழுதி வாழ்க கன்றே! -- ; 1 જા