பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மறைமலையடிகளை மறந்திடாதே! இனித்திருக்கும் செந்தமிழில் வடமொ ழிக்கேன் இடங்கொடுத்துத் தமிழ்ச்சுவையைக் கெடுக்க - வேண்டும் தனித்திருக்கும் வன்மையுள்ள தமிழி ைேடு தகுதியிலாப் பிறமொழிச்சொல் கலக்க வேண்டாம் எனத்திருவாய் மலர்ந்தவர்யார் ? இசைத்த வண்ணம் - இலக்கியங்கள் தூய்தமிழில் ஆக்கி வைத்து தனித்தமிழின் கலங்காத்தார் மறைம லையார் தமிழ்மகனே அவர்பெருமை மறந்தி டாதே! பலமொழியும் கற்றறிந்தார்; தமிழிற் சேர்ந்த பண்பாட்டை யுணர்ந்திட்டார்; இனிமை கண்டார்: உலகமொழி அனைத்தும்வந் தெதிர்கின் ருலும் ஒருதமிழ்ச்சொற் கீடாகா தென்ற றிந்தார்; விலகுகவே விலகுகவே என்று கூறி வேற்றுமொழிச் சொல்களைந்து தமிழில் நூற்கள் பலதந்து தமிழ்காத்தார் மறைம லையார் : r பழந்தமிழா அவர்கினேவை மறந்தி டாதே !