பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


22 மறைமலையடிகளை மறந்திடாதே ! "சந்தேகம்' தமிழில்லை, ஐய" முண்டோ ? "சந்தோஷம்" தமிழில்லை, "மகிழ்ச்சி” கண்டீர் குந்துமொரு வண்டியைப்போய் 'சைக்கிள்" என்பீர் குறையுண்டோ மிதிவண்டி" என்னும் சொல்லில்: "எந்திரத்'தை 'விசைப்பொறி"தான் என்று சொன்னல் இளக்கமில்லை பெருமையென எடுத்துக் காட்டிச் செந்தமிழைத் தூய்தாக்கி 'யூரீ”யை நீக்கித் "திருத்' தந்தார் மறைமலையார் மறந்தி டாதே! தமிழ்காக்கத் தனித்தமிழின் பெருமை காக்கத் தமிழ்நாட்டார் தம்மதிப்புக் காக்க வென்றே இமைதுடிக்க மறந்தாலும் நினைவு மாரு திருந்துபல செயல்செய்தார் மறைம லையார் நமைமறவா திருந்தார்க்கு வாழ்வு நாளில் நன்றிசெய்ய மறந்துவிட்டோம்; இறந்த பின்னும் அமையுமொரு செயல்செய்யா திருந்து விட்டால் அழகல்ல தமிழ்மகனே மறந்தி டாதே !