பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சிவனும் பெருமாளும் போற்றும் செந்தமிழ் வாயிற் பிறந்து வழங்கு மொருமொழியைத் தாய்மொழியென் ருரேனே சாற்றிடுவீர் ?-தாய்தான் எடுத்தணத்துக் கொஞ்சி யிருந்தக்காற் சொல்லிக் கொடுத்ததனை நெஞ்சிற் குறித்து. பிறமொழியைக் கற்றறிந்து பேசுமொழி யாக்கி யுறவுமொழி நீத்தாலென் ஒது ?-நறுந்தேனே நேரான பாதைவழி கின்றிருந்தும் முட்காட்டைச் சீராக்க வெண்ணுவதே வீண் ! விஞ்ஞானம் கற்பதற்கு வேற்றுமொழி வேண்டுமெனில் நஞான மேதமிழா லாமன் ருே ?-மெய்யான எஞ்ஞான மும்தமிழில் ஏற்றிடலாம் மக்களுளத் தஞ்ஞானங் தீர்ந்துவிட்டக் கால் ! பன்மொழியார் சேர்ந்திருக்கும் பாரதான் னுட்டுமொழி ஒன்றுபொது வேண்டாமோ ஒதிடுவீர் ?- ஒன்று பொதுவானுல் ம்ற்றவெலாம் போக்கற் ருெழியும் அதையாய்ந் திடவேண்டா மா ?