30 புதிய தமிழ் நாடு
பகுத்தறிவில் சற்ருழ்ந்து பார்ப்பி ராயின்
பாரினிலே மனிதரிலே வேற்று மைகள் வகுத்ததெலாம் சோம்பேறி யாக வாழ்ந்து
வந்தகொடும் பாதகரே யென்று காண்பீர் ! மிகுத்தநலம் ஒருவர்உற நாட்கள் தோறும்
மேனியெலாம் கருமையுற வேர்வை ரத்தம் உகுத்திடுக ஒருவரென்று மன்றில் சட்டம்
உண்டாக்கி வைத்தபெரும் சண்டா ளர்யார்?
வண்ணனின் சேயையொரு வண்ணு னென்று
வகுத்துவிட்ட மடையர்களைப் பெரியா ரென்றே அண்ணுந்து பார்க்கின்ற அறிவற் ருேரே
யான் சொல்லும் சொற்கேளிர்! ஏழை நெஞ்சம் புண்ணுக நடைமுறையில் தாழ்வு செய்து
பொறுமைக்கோர் எல்லையினைக் காணச் செய்தீர்! எண்ணுமல் இருந்துவிட்டீர் பொறுமைக் கெல்லை என்ருலே புரட்சிப்போர்த் துவக்க மென்றே !
தொழிற்பெயரைச் சாதியென்று வகுத்த பின்னர்
தோன்றியவள் வறுமையெனும் ஆட்டக் காரி. எழிற்பிறவி மானிடமென் றறிஞர் சொல்வார்
யாமுமந்தப் பிறவிதனை யடைந்தும் வாடி நிழல்காண வகையிைன்றி நிற்க நேர்ந்தால்
நெஞ்சந்தான் கொதியாதோ? இந்த காட்டில் அழுதொருவன் இருக்கும்வரை விடுத லேயை
அடைந்துவிட்டோம் என்பதெல்லாம் வெறும்
கூப் பாடே!
பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/32
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
