புதிய தமிழ் நாடு 31
ஏழ்மையெனும் நீரருந்தி உழைத்து ழைத்தே
இன்பமெனும் நற்குளத்தில் நீர ருந்த வாழ்வினிலே இயலாமல் வாட்ட முற்று
வாழுகின்ற பெரும்பகுதி கண்டும், செல்வர் ஆளுகின்ற மனப்போக்கும், உழைப்ப தின்றி
அளவிடுவோம் போகமெனும் கிலயும் கண்டால் கூழுமின்றி வாழுகின்ற மக்கள் உள்ளங்
கொதியாம லிருப்பாரோ சிந்திப் பீரே !
வீரமுள்ள இளைஞர்களே இங்கு வாரீர் !
விடுதலைக்கு வழிவகுப்போம் தமிழ ரெல்லாம் வீரரென வாழ்ந்தநாள் பொதுமைக் கொள்கை
விளங்கியதென் றிலக்கியத்தில் சான்று கண்டோம், ஆரமுது தினம்படைத்தே யுண்ண வேண்டின்
அனைவருக்கும் பொதுவிந்த உலக மென்ற நேரியதோர் கொள்கையினைத் தமிழர் நாட்டில்
நிலைக்கவைத்தால் யாவருக்கும் விடுத லேதான்!
பொதுமையெனில் பசுவருகில் புலிகள் வந்து
பொதுக்குளத்தில் நீரருந்தல் என்று சில்லோர் மதியின்றிப் புகல்கின் ருர் தமிழர் நாட்டில்
மாடென்றும் புலியென்றும் பேத மில்லை. புதிதாகும் தமிழகத்தில் உள்ளோர்க் கெல்லாம்
பொதுவாகத் தமிழரென்று பெயரே யன்றி நிதிபடைத்தார் இவரிவரே வறிய ரென்னும்
நிலைபோகும் வளமாகும் தமிழர் நாடே!
பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/33
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
