பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


முன்னுரை

சின்ன வயதிலேயே என்னைத் தமிழ் ஆட் கொண்டுவிட்டது. தமிழ் என்ருல் என் உயிர் என்று நினைக்கும்படியான ஓர் உள்ளுணர்வை என்னிடத்தே தூண்டிவிட்டவை க வி ய ர சர் பாரதிதாசனின் பாடல்கள் தாம். பாரதிதாசன் பாடல்களை முன்மாதிரியாக வைத்து ன் பாடல்களை எழுதத் துவங்கினேன். அப்போது என் ஆசிரியராய் இருந்த பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரையார் இத்துறையில் என்னை ஊக்கப்படுத்தினர். ஆசிரியர், திரு. சுப. இராமநாதன் அவர்களும் என் தமிழார்வத்தை வளரச் செய்தார். தமிழ் உல கில் என்னைப் பெரும் புகழ் பெறச் செய்தவர் 'பொன்னி' ஆசிரியர், திரு முருகு. சுப்பிர மணியன் ஆவார்.

இவர்களெல்லாம் என் கவிதைகளை வளர்க்கவும் பரப்பவும் துணை செய்தார்கள். ஆனல், அரசாங்கமோ பத்து ஆண்டுகளுக்கு முன்னல் நான் எழுதி வெளியிட்ட இன்பத் திராவிடம்' என்ற இனிய தமிழ்க் கவிதை நூலைத் தடை செய்துவிட்டது.

இருந்தாலும் என் தமிழ்ப் பற்று முற்றுப் பெற்றுவிட வில்லை. 'தமிழ் வளர்கிறது !' என்ற நூலே இப்போது தமிழ் மக்களுக்குக் காணிக்கையாக்கி யிருக்கிறேன்.

கற்றுத் தமிழுணர்ச்சி பெற்று நல்ல தமிழை வளர்க்கவும், நலிவு வராமல் காக்கவும் உறுதி யேற்க வேண்டியது தமிழர் கடன்.


சென்னை-1 உங்கள்

20-6-1960 நாரா நாச்சியப்பன்,