பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வல்லிக்கண்ணன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்த மதிப்பிற்கு ஓராயிர ரூபாய் கடன் இருந்தது. நில முதலியன பயிரிடுவோரும், ஒப்பந்தப்படி தானிய முதலிய வழங்குவதின்று. இந்த நிலை வரக்காரணம், முன்னிருந்த நான்காவது குருநாதர், பூசை நியம முதலியவற்றில் ஈடுபட்டும், தியானம், செபம், பாட போதனைகளைச் செய்து கொண்டும் இருந்தார்களேயன்றி, இவைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமலிருந்து விட்டதேயாகும். அவர்கள் ஆன்மார்த்த பூசை முடித்த பின்னர்தான் மடைப்பள்ளியிற் புகுந்து தாம் திருவமுது தயாரிக்கத் தொடங்குவ தென்றும், அவர்கள், தியானம், பாராயணம் முதலியவை முடித்து மூலவராம் முருகப் பெருமானை வலம் வந்து தொழுது அமுதருந்த வருங்கால் பிற்பகல் 2 மணிக்கு மேலாகிவிடும் என்றும் நம் சுவாமிகளின் பூர்வாசிரம அம்மான் மனைவியார் அமிர்தம் அம்மையாராவர்கள் கூறுவார்கள். மாமா அவர்கள் மடாலயச் செயலுரிமைப் பொறுப்பேற்ற பின்னரே நிலவருவாய் முதலியவை செம்மைப் பட்டதாகவுங் கூறியிருக்கிறார்கள்.

முன் சுவாமிகளைச் சிலர் மனம் மாற்றி, அவர்கள் கொண்டிருந்த கருத்திற்குப் புறம்பாக வேறொருவரைத் தலைமையேற்கக் குறிப்பிட்டு உயில் எழுதச் செய்து விட்டார்கள். அவ்வாறெழுதிய பின் சிலநாள் கடந்து, நான்காவது சுவாமிகள் உறுதியுடன் இவ்விளம் பிள்ளையையே நியமித்து மாற்றி எழுதிவிட்டார்கள். எழுதியதோடமையாது அன்றே, பள்ளியினின்று பகலுணவுக்கு வந்த அவர்களை முறைப்படி தீட்சை செய்வித்துச் சந்நியாச நிலையேற்கச் செய்து உபதேசமும் செய்துவிட்டார்கள். பின் 4 நாள் கழித்தே முன் சுவாமிகள் பரிபூரண மடைந்தார்கள். இதனால் முதலில் உயிலிற் குறிப்பிடப் பெற்றவரும், அவரைச் சேர்ந்தார் சிலரும் வழக்கிட்டதும் உண்டு.

திருவருள் வலத்தால் வழக்கிட்டோர் தோற்றுச் செயலற்று விட்டனர். அவர்கள் வேறு செய்தற்கிடனின்றி மடாலயம் வந்தபோதும் அவர்களை முகங்கோணாது வரவேற்று வேண்டுவன செய்த பெருந்தன்மை யாளர்கள் நம் குருநாதர்.

அன்றைய நிலையில், வேறொருவர் தலைமைப் பீடத்தமர்ந் தவராயிருந்தால் எவ்வெப்படி யெல்லாம் ஆகியிருக்குமோ ? கடன் தொல்லை ஒருபால், கடன் கொடுத்தவர்கள் சொத்துக்களைத் தம் வயப்படுத்திக் கொள்ள முற்பட்டு நெருக்கினார்கள். இளம் பருவத்திலே இத்தனை தொல்லை-