உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

101

சிட்டிருக்கிறேன். இம்முயற்சிக் கிடையூன்றிக் கூட்டி முடித்த ஆண்டலைக் கொடியுர்த்த எம் மருமைக் கடவுளின் திருவரு ளைச் சிந்தித்துள்ளேன்.

இங்ஙனம்,
சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய
சுவாமிகள்"


என்பதாகும். இதில் தம் ஆசிரியரை இரண்டிடங்களிற் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டிடங்களிலும் மகாராஜ ராஜஸ்ரீ, அவர்கள் என்ற மரியாதை யளித்துள்ளமை காணலாம்.

சில காலங் கடந்த பின் தம் தமிழாசிரியர் அரனடி யடைந்தார். அப்போது அடிகளார் அடைந்த மனத்துயருக் கோரளவில்லை. தம் மடாலயத்து நூல் நிலையத்திற்குச் "சுவாமிநாத புத்தகசாலை" எனப் பெயரிட்டார்கள். அவருடைய குமாரரான, முத்துகிருஷ்ண ஐயரை B.A வகுப்பு வரை படிக்கச் செய்தார்கள். ஆண்டு தோறும் அவர்களது குடும்பத்திற்கு வேண்டுமளவிற்கு நெல்லும் பிற பொருள்களும் கொடுத்து உதவினார்கள்.

இவை, சுவாமிகளது குருபக்திக்கு ஓர் எடுத்துக் காட்டாவன வாம். தன் குருவின்மீது வைத்த பற்றுதலோடு, சுவாமிகள் பின்னர் பற்பல நூல்களிலும் தாமே பயின்று சிறந்த அறிஞராயினார்கள்.

அடிகளார், தெலுங்கு மொழியை நான்கு ஆண்டுகள் பயின்றும், ஆங்கிலத்தை ஏழாண்டுகள் பயின்றும், வடமொழி, தென்மொழிகளைப் பதினைந்து ஆண்டுகள் பயின்றும் பேரறிவு படைத்தவர்களாயினார்கள்.

வடமொழியாசிரியராக வாய்த்தவர்கள், முதலில் ஸ்ரீமத் உபய வேதாந்த கோவிந்தா சாரியாரவர்கள். அடுத்து, டவுன் காலேஜ் சமஸ்கிருத பண்டிதர் - இராமநாத சாஸ்திரிகள் என்பவராவர்.

தமிழ் மொழியாசிரியராக முதலிற் சில காலம், பிரான் மலை தெய்வசிகாமணி ஐயா அவர்கள் இருந்தது முண்டு.

தவக் கோலம், மடாலயத் தலைமை பூண்ட பின்னர், ஆசிரியர்களைத் தம் இருப்பிடத்திற்கே வருவித்துப் பணிவுடனும், ஆசிரியர் சொல் கடவாமலும் பயின்று சிறந்தொளிர்வது எல்லார்க்கும் வாய்ப்பதோர் வாய்ப்பாகாது. கல்வியின் மீது அடங்கா ஆவல் கொண்ட நம் அடிகளா ரைப்போன்ற சிலரே அங்ஙனம் சிறந் தொளிர இயலுமென்பது ஈண்டுக் குறிப்பிட வேண்டியுள்ளது.