பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வல்லிக்கண்ணன்


தமிழ் வளர்க்கும் தண்ணளி.

'அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவுப் பணியே தெய்வப்பணி. அறிவும், சிவமும் இரண்டென்பர் அறிவிலார், அறிவே சிவமாவது ஆரும் அறிகிலார், அறிவே சிவமாவது யாரும்அறிந்த பின், அறிவே சிவமாய் அமர்ந்திருப்பாரே, எனத் திருமந்திரப்பாவினைச் சிறிது மாற்றிய பாட்டு, இவைகளைக் கூறி அடிகளார், சமயம் வாய்த்த போதெல்லாம் வற்புறுத்துவது உண்டு. இந்த அறிவைப் பெறக் கல்வியே துணை. எனவே மக்களிடையிலே கல்வியறிவினை மிகுதியாகப் பரப்புதல். வேண்டுமென்பதைச் சிறந்த குறிக்கோள்களுள் ஒன்றாகக் கொண்டவர் நம் அடிகளார். தமக்குக் கல்வியறிவு வாய்த்த தெங்ஙனமோ, அங்ஙனமே பிறர்க்கும் வாய்க்க வேண்டு மென்ற பேரவா அடிகளாரிடம் காணப்பட்டது வாய்ப்பினை உண்டாக்கிக் கொடுப்பது, கற்றவர் கடமை; கற்றவர்க்குக் கல்வியறிவாற்றல்களிற் சிறந்தவராகிய செல்வர்களின் ஆதரவும் வேண்டும். இவை, சுவாமிகளின் உள்ளத்திலே கிளர்ந்தெழுந்த எண்ணங்கள்.

இத்தகைய எண்ணங்களில் மூழ்கிக் காலங் கருதியிருந்த நம் சுவாமிகளுக்கு 1900 ஆம் ஆண்டு தக்க வாய்ப்பு ஒன்று கிடைத்தது. பாலவநத்தம் ஜமீன் தாரரான. பாண்டித்துரைத் தேவரவர்கள் சென்னை சென்று மீளுங்கால், திருப்பாதிரிப்புலியூரைத் தரிசிக்க வந்தார். ஆலய தரிசனத்தோடு, அறிவாற்றல்கள் நிறைந்த சுவாமிகளையும் தரிசிக்க விரும்பி மடாலயமும் வந்தார். சுவாமிகளிடம் அளவளாவினார். அன்று மாலை, சுவாமிகள் தேவரவர்களைத் தலைமை தாங்கச் செய்து, தமிழின் தற்கால நிலை என்ற பொருள் பற்றி அரியதோர் சொற் பொழிவு நிகழ்த்தினார்கள். சுவாமிகளின் சொல்லமுதைச் செவிமாந்திய தேவரவர்கள் மிக மகிழ்ந்தார்கள். சுவாமிகள் தம் உரையில், ஜமீன்தாரவர்களும், மற்றைய செல்வர்களும் தமிழைத் தழைப்பிக்க வேண்டும்; முச்சங்கம் இருந்து தமிழ் வளர்த்த மதுரையம் பதியிலே தமிழின் வளர்ச்சிக்கு ஒரு சங்கமுமில்லாத நிலை வந்தது ஏன்? பிற நாட்டு மொழியும், பிற நாட்டு நாகரிகமும் நம்மிடையே பரவி வருவதாலன்றோ?: அவை, மக்களுடைய தெய்வீக உணர்ச்சி, தொண்டு மனப்பான்மை முதலியவற்றைத் தலையெடுக்காமற் செய்து விடுவனவன்றோ? உண்மையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமேல், ஆங்காங்கே