பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

103

சங்கங்கள் தோன்ற வேண்டும்; மதுரையம்பதியில் ஓர் சங்கத்தினை நிறுவி வளர்க்கும் பொறுப்பினைத் தேவரவர்கள் முன்னின்று ஏற்க வேண்டும் என வற்புறுத்தினார்கள்.

சுவாமிகளுடைய பேச்சுத்திறனில் ஈடுபட்டு மனத்தைப் பறிக்கொடுத்திருந்த தேவரவர்கள், தன் முடிவுரையில் சுவாமிகளுடைய கருத்துக்கு மக்கள் ஆதரவு இன்றியமையாத தென்று கூறித் தாம், தம் சகோதரராகிய பாஸ்கர சேதுபதியவர்களிடம் அறிவித்து மதுரையிற் சங்கம் நிறுவ முனைவதாக வாக்களித்தனர்.

அந்த ஆண்டிலேயே, பாஸ்கர சேதுபதியர்கள், திருவண்ணா மலைத் தீப தரிசனத்திற்காக வந்தார். வழியில் திருப்பாதிரிப்புலியூர் மடத்திற்கு வந்தார். பரிவாரங்களுடன் வந்தார். பரிவாரங்களுடன் வந்த அவருக்குத் திருமடாலயத்தில் வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப் பெற்றன. அன்று மாலையும் சுவாமிகள் அரிய சொற்பொழிவு ஒன்று மடாலயத்தில் ஆற்றினார்கள். அடிகளாருடைய சொற் பொழிவாற் பெரிதும் மகிழ்ச்சியுற்ற சேதுபதியவர்கள், தமிழ் வளர்க்க ஒர் கலாசாலை மதுரையில் ஏற்பட வேண்டியதன் அவசியத்தையறிவித்து, அதற் காம் பொருட் செலவிற்குத் தாமே பொறுப் பேற்பதாக வாக்களித்தார்.

24.5.1901 ல் மதுரையம் பதியில் மதுரைத் தமிழ்ச் சங்கம் என்ற பெயர் சூட்டித் தமக்குரிய மாளிகை யொன்றிலே சங்கம் நிறுவினார்கள். அதன் அங்கமாக எழுந்தது சேதுபதி கலாசாலை. மாணவர் பிரவேச பண்டிதம், பாலபண்டிதம், பண்டிதம் என்ற தேர்வுகளுக்குப் பயிற்றப் பெற்றனர். உண்டியும் உறையுளும் அவர்கட்கு இலவசமாகவே வழங்கப் பெற்றன. செந்தமிழ் என்ற மாத இதழும் அச்சங்கத்தின் சார்பில் வெளி வரலாயிற்று. இவை யாவும் அறிந்த நம் சுவாமிகள் சேதுபதியவர்களுடைய ஆதரவையும் ஊக்கத்ததையும் பாராட்டித் திருமுகம் விடுத்தார்கள். சேதுபதியவர்களின் ஊக்கத்தையும், அறச்செயலையும், தமிழ்த் தொண்டையும் யாவரிடமும் பாராட்டிக் கூறுவார்கள்.

வாணிவிலாச சபை : திருப்பாதிரிப்புலியூரைத் தலைமையி டமாகக் கொண்டுள்ள இம் மடாலயத்திற்குத் திருகோவலூரிலும், ஆரணி - திருமலை சமுத்திரத்திலும், விருத்தாசலமாம் திருமுது குன்றத்திலும் இன்றும் மடங்கள் உள. அடிகளார், பொறுப் பேற்றிருந்த தொடக்க நாளிலே