106
வல்லிக்கண்ணன்
ஆண்டு விழாக்களும் ஆன்றோர் பலர் திரளலும் :
வாணி விலாச சபை, ஞானியார் மாணவர் கழகம் இவற்றின் ஆண்டு விழாக்கள் அவ்வப்போது நிகழ்வது உண்டு. பாண்டித் துரைத் தேவரவர்கள், டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள், ஜஸ்டிஸ் டி. சதாசிவ ஐயரவர்கள், என்ஜினியர் மாணிக்க நாயகரவர்கள், சதாசிவம் பிள்ளையவர்கள், சோ. வடிவேலு செட்டியாரவர்கள், பொ. முத்தையா பிள்ளை யவர்கள், ரா. பி. சேதுப் பிள்ளையவர்கள், சிவகுருநாதம் பிள்ளையவர்கள் முதலாயினர் விழாவினுக்கு வந்து சொற்பொழி வாற்றியும், விரிவுரையாற்றியும் சிறப்பித்த துண்டு. வாழ்த்துரை கூறு முகத்தான் அடிகளார் அரிய பல செய்திகளைக் கேட்டார்ப் பிணிப்புறும் வண்ணம் கூறுவார்கள். வந்தவர் உள்ளத்திற் பற்றுமாறு ஆங்காங்கு பலபல சங்கங்களையும் கழகங்கங்களையும் நிறுவித் தமிழ்ப் பணியும் தெய்வப் பணியும் செய்து சமுதாயத் தொண்டு புரியுமாறு வற்புறுத்துவார்கள்.
சுவாமிகள் தொடர்புபெற்ற அமைப்புகள் : கோவல் - மணம் பூண்டி, ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்கள் தம் கிராமத்தில், வள்ளற் பாக்கம் (காரணப்பட்டு) சமரச பஜனை, ச. மு. கந்தசாமிப் பிள்ளையைத் தலைவராயிருக்க வைத்து, அருட்சோதிநாத பக்த பால சமாஜம் என்ற பெயருடன் 20-09-1908ல் ஓர் சமாஜத்தை நிறுவினர். அதன் தொடர்பாக ஞாயிறு தோறும் சொற்பொழிவுகளும், வியாழக்கிழமை தோறும் பஜனையும் நடைபெற்றன. திருக்கோவலூர், மணம் பூண்டி அறையணி நல்லூர், கோட்ட மருதூர், நெற்குணம், கோவல் வீராட்டானம் அமையும் கீழையூர் ஆகிய பல ஊர்மக்கள் அக்கழகத்தால் தமிழ்ப் பற்றும் சைவ உணர்ச்சியும் மிக்கவராய்த் தம் பின்னோரும் நல்வழி நடக்க வழி வகுத்தது அந்தச் சமாஜம்.
1911ஆம் ஆண்டில் திருக்கோவலூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் புதிய கட்டிட வேலைகள் தொடங்கின. சுவாமிகள், தாமே நேரில் அங்கு சென்று அவைகளைச் செப்பமுறச் செய்து முடிக்கத் திருவுளங் கொண்டார்கள். அதனால் அங்கே சில காலம் தங்கினார்கள். அப்போது, ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்கள், தம் குல முன்னேற்றங் கருதி ஓர் சங்கம் அமைக்க முற்பட்டார். மலைய மன்னர், நத்த-