108
வல்லிக்கண்ணன்
ஸ்ரீலஸ்ரீ – சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், இராமசடகோப அய்யங்கார், மே. வே. துரைசாமி உடையார், ம. ரா. குமார சாமிப் பிள்ளை, பேரூர் ஞானப் பூங்கோதையம்மையார், பெருந்துறை - கணேச முதலியார் ஆகிய பலர் சொற்பொழி வாற்றினார்.
இராம - சடகோப அய்யங்கார், சத்தியாக்கிரகி: என்னும் பொருள்பற்றிப் பேசினார் . பிரஹலாதன் முதலாயினாரைப் பற்றிப் பேசினார். திருநாவுக்கரசர், எதிரியை வ்ணங்க வைத்தமையால் அவரே உண்மைச் சத்தியாக்கிரஹி என்று குறிப்பிட்டார். அக்கருத்துக்குக் கூட்டத்திலிருந்த ஒருவர் மறுப்புத் தெரிவித்தார். “மெய்ப்பொருள் நாயனார் சத்தியாகிரகி யல்லவா?“ என்று வினவினார். அய்யங்கார், அதனை ஏற்க மறுத்தபோது கூட்டத்தில் குழப்பம் உண்டாயிற்று. அடிகளாரோ, தம் தனித்த நாவன்மையால், மெய்ப் பொருள் நாயனார் தொண்டு முதலியவற்றை விரிவாகப் பேசி, அனைவரையும் மகிழவைத்தனர். பேரூர் ஞானப் பூங்கோதை யம்மையார், அவிநாசிப் புராணம் பற்றிப் பேசினர். அப்பேச் சின் முடிவில், “நரியைக் குதிரை“ என்று தொடங்கும் திருவாசகப் பாடலை உளமுருக்கும் வண்ணம் பாடினார். குழுமி யிருந்தாரனை வரும் ஆனந்தக் கண்ணிர் துளிர்க்க நெஞ்சம் உருகி இறைவயமாயினர்.
அந்தப் பேரவையில் கோவல், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை உயிர்ப்பலி, தகாத செயலாக இருக்கும்போது, தம் மரபினர் சில இடங்களில் இதற்கு ஆதரவு தருவதாகக் கூறி அதனை அறவே விட்டுவிட வேண்டுமென்று ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். பலர் அதனை ஆதரித்துப் பேசினர். பின்னர் அவையினரின் முழு ஒத்துழைப்புடன் அத்தீர்மானம் நிறைவேறியது. சுவாமிகள் தம் முடிவுரையில் எழுத்தளவில் நில்லாமல், யாவரும் செயலளவில் கைக்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்கள். சேந்தமங்கலம் செல்லாண்டியம்மன் என்னும் பிடாரி திருவிழாவில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியிடப் பெறுதல் வழக்கமாக இருந்தது. மேற்கண்ட தீர்மானத்தையொட்டி நம் சுவாமிகள் ஆற்றிய அறிவுரையைச் செவிமடுத்த, மிட்டாதார், எஸ். ஆர் அயிராவத உடையார் அவர்கள், அவ்வாண்டு முதல் அக்கோயிலில் உயிர்ப்பலி நடவாதவாறு வகை செய்தார். அதனையறிந்த சுவாமிகள், அகமகிழ்வு கொண்டார்கள்.