பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

வல்லிக்கண்ணன்

நடைபெற்றது. அவ்விழாவினுக்குத் திருவாவடுதுறையாதீனம் தம் பிரதிநிதியை யனுப்பிச் சில மரியாதைகளும் செய்வித்தது. அந்த விழாவின் பொறுப்பேற்று நன்கு நிறைவேற்றிய அன்பர் திரு. சின்னசாமி ரெட்டியாரவர்கள்.

சுவாமிகள் திருக்கோவலூர் எழுந்தருளும் போதெல்லாம் திருவெண்ணெய் நல்லூர் வழியே எழுந்தருள்வதும், மீண்டருள்வதுமான சமயங்களில் வாய்க்கும் போதெல்லாம் திரு வெண்ணெய் நல்லூர் மக்கள் சுவாமிகளின் சொல்ல முதங்களைப் பெறத் தவறியதில்லை.

நெல்லிக்குப்பம் - சோழவல்லி வாகீச பக்தஜன சபை : சுவாமிகளின் மாணவராய்த் தமிழறிந்தவர் பலருள், சோழவல்லி - ப. பாலசுந்தர நாயனாரும் ஒருவர். அவர், சுவாமிகளிடம் பல நூல்களைக் கற்றவர். சுவாமிகளின் அருள் மொழி கடைப்பிடித்துத் தம் ஊரில் 25-4-1910ல் வாகீசபக்தஜன சபையைத் தோற்றுவித்தார். தொடக்க விழா, ஸ்ரீலஸ்ரீ-சுவாமிகளின் தலைமையிலேயே நிகழ்வதாயிற்று. வாரந் தோறும் வழிபாடு, சொற்பொழிவுகளும், கார்த்திகை முதலான நாட்களில் சிறப்பு வழிபாடு - சொற்பொழிவுகளும், ஆண்டு தோறும் சித்திரைச் சதயமாம் அப்பர் சுவாமிகள் குருபூசை விழாவின் தொடர்பாக ஆண்டு விழாவும் சிறப்பு விழாவும் கொண்டாடும் ஆண்டு விழாக்களிலும், இயலும் பிற சமயங்களிலும் சுவாமிகள் ஆங்குச்சென்று தலைமை யேற்றும் சொற்பொழிவுகளாற்றியும் சிறப்பிப்பது உண்டு. இதனால், நெல்லிக்குப்பம், கீழ்ப்பட்டாம் பாக்கம், மேல் பட்டாம் பாக்கம், காரமணிக்குப்பம் முதலாய பல ஊரினர் நலம் பல பெற்றனர்.

புதுவையும் சுவாமிகளும் : புதுவை, பங்காரு பத்தரென்பா ரொருவர். அடிகளாரிடம் சிறந்த அன்பு பூண்டு ஒழுகியவர். அவர் சுவாமிகளை அழைத்துச் சென்று, அவர்கள் தலைமையில் விரோதிகிருது (1911 ஆம் , ஆண்டில் புதுவையில் சித்திரைத் திங்கள் முதல் நாளிலே, கலைமகள் கழகம் எனப் பெயரியதோர் கழகத்தைத் தொடங்கினர். அந்தக் கழகம் பெரியதொரு அமைப்பாகத் திகழ்வதாயிற்று. அக் கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார், வ.வே. சுப்பிரமணிய அய்யர் முதலியோருங்கூட அங்கத்தவராயிருந்தனர். அந்தக் கலைமகள் கழகத்தின் அங்கத்தவர்கள் சிறந்த நாட்டுப் பற்றும் கொண்டு- தொண்டுகள் பல புரிந்தமைக்குச் சுவாமிகளின்