பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வல்லிக்கண்ணன்

நல்கி அடியவர்க்கருள் பாலிக்கும் திருத்தலமாகும். அந்தக் கோயில் நம் மடாலய முதற் குரு நாதரின் நேர்ச் சீடராகிய அருணாசல சுவாமிகள் என்பரால் இரண்டாங் குருநாதருக்காக வாங்கப் பெற்றதும், தானமாகப் பெற்றதுமான இடத்தில் இம் மடாலய இரண்டாங் குருநாதரால் பிரதிட்டை செய்யப்பெற்ற திருவுருவ வழிபாட்டுக்குரிய இடமாகும். கலி 4900 ஆம் ஆண்டாகிய சித்தார்த்தி, ஆடி 20-ஆம் நாளில், சென்னைப் பெரிய பணம் 1610-க்குக் காவல் நல்ல தம்பி நாயக்கர், தென்னவராய நாயக்கர் ஆம் இருவரிடமும் பாதி இடம் வாங்கியும், அவர்கள் தானமாக அளித்த ஏனைப்பாதியையும் இடமாகக் கொண்டும் அமைந்துள்ள திருக்கோயில் அந்தச் சுற்று வட்டாரத்திலுள்ளோர், அந்தத் திருக்கோயிலிடம் நீங்காப் பற்றுடையவர். முருகப்பெருமான் கண்கண்ட தெய்வமாவர். ஆரணி, சுற்றுப்புற மக்கள் ஆண்டுதோறும் பற்பல விழாக்களைத் தாமே மனமுவந்து ஏற்றுச் செய்கிறார்கள். வாரந்தோறும் வார வழிபாடு, ஞாயிறுதோறும் பொதுப்படையாகவும், மங்கையர்கரசியார் வார வழிபாடு வெள்ளிக்கிழமைதோறும் பெண்களாலும் சிறப்புற நடை பெறுவதும் அவ்வூரவரது தெய்வ பக்திக்கும், சிறப்பாக அக்கோயிலிடங் கொண்டுள்ள முருகனிடம் கொண்டுள்ள பற்றுக்கும் சான்றுகளாம். கடந்த எட்டாண்டுகளுக்கு முன் சில திருப்பணிகளை நிறைவேற்றி 31.5.1964-ல் சிறப்பான முறையில் அக்கோயிலுக்குக் குடமுழுக்கு விழாவினை நிறைவேற்றிய பெருமைஅன்பர்களையே சாரும். -

அத்தகைய ஆரணியில் திருக்கோயிலையடுத்து, ஓர் திருமடத்தைத் தனியே நிறுவ நம் சுவாமிகள் திருவுளம் பற்றினார்கள். 1927-28-ல் சில மாதங்கள் அங்கேயே எழுந்தருளியிருந்து, தம் நேர்ப் பார்வையிலேயே வேலைகளை முடித்து 1929-ல் அறநிலையம் புகுவிழாவும் செய்து மகிழ்ந்தார்கள்.

அந்த நாட்களில்தான், அவ்வூரில் வாழ்ந்திருந்தவரான திரு. முத்து சு.மாணிக்கவாசக முதலியாரவர்கள் (இந்நாளில் காஞ்சித் தொண்டைமண்டல ஆதீனத் தலைவர்களான - ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள்), திரு. க. வச்சிரவேல் முதலியார் ஆகியோர் சுவாமிகளிடம் சித்தாந்த பாடம் பயின்று திகழ்பவர்கள். பலர் பாடம் கேட்டார்களெனினும்,