பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

வல்லிக்கண்ணன்


சைவம் தழைக்கச் சமரசம் காணல்

சமய எண்ணம் :

நம் அடிகளுக்குச் சமய சாத்திரம் கற்பித்தவர் அவர் தம் குருநாதராம் நான்காம் பட்டத்து அடிகள். சமய சாத்திரத்தை தமிழ் வடமொழிகள் மூலம் நன்கு அறிந்தனர். நாட்டில் தமிழகத்தில் சமய எண்ணம் குன்றி வந்ததை மனதில் நினைத்து வருந்தினர். எப்படியும் மக்கள் சமய உணர்வு பெற்று நன்னெறி சேர்தற்கு மேற் கொள்ள வேண்டிய பணி எது என நினைத்தனர். தாம் ஆங்காங்கு சென்று சமயக் சொற்பொழிவாற்றுதல்தான் தக்கது என எண்ணினர். அவ்வாறே செயல் மேற்கொண்டபோதும் மன நிறைவு இல்லை. அதனால் தாம் மட்டுமின்றிச் சமய அறிஞர் பலரும் இத்தொழிலை மேற்கொள்ளின் நல்லது எனத் திருவுளம் கொண்டு அதற்கு ஆங்காங்குக் கழகம் அமைப்பதே சிறந்தது எனக் கருதினர். அதற்குத்தக்க காலமும் பார்த்திருந்தனர்.

சமாசம் தோற்றுவித்தல் :

கி.பி.1900-ல் மடாலயத்திற்கு வந்த பாண்டித்துரைத் தேவர்கள் முன்னிலையிலே நடந்த அரியதோர் சொற்பொழிவில் தமிழின் பெருமையும், சமயச் சீர்குலைவும் பற்றி விரிவாக எடுத்துரைத் தார்கள். இப்படிப் பல பேரறிஞர்களிடம் தம் திருவுளக் கருத்தை வெளியிட்டு வந்தார்கள்.

சென்னையில் சில அறிஞர்களே சித்தாந்த நூல்களில் தேர்ச்சி பெற்றவராயிருந்தனர். தெற்கே அவற்றைப் பரப்பத் திருமடங்கள் பல இருந்தன - இருக்கின்றனவாதலால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஓர் அமைப்பினைக் காண்டலே சிறந்த நலம் பயக்கும் எனத் துணிந்தார்கள். கடலூரில் அப்போது தென்னாற்காடு மாவட்ட முனிசிபாக இருந்தவர் திரு. J.M. நல்லசாமிப் பிள்ளையவர்கள். அவர் சுவாமிகளின் சிறந்த அறிவு நலங்கண்டு அடிக்கடி வந்து சித்தாந்தத் தொடர்பான உரையாடலில் ஈடுபடுபவர். அடிகளாரிடம் அளவளாவிய அறிவின் மேம்பாட்டால்தான் பின்னாளில் அவர் சிவஞான போதத்தை ஆங்கிலத்தில் - மொழிபெயர்த்தார், அவரிடம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட அமைப்பு ஒன்றின் வாயிலாகச் சித்தாந்த நூல்களைப் பரப்புதல் இன்றியமையாத சமயப் பணியாகு-