பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

வல்லிக்கண்ணன்

சமாசக்கூட்டம் நடத்தப் பாடசாலை இடத்தைக் கொடுத்தது மன்றி 200 ரூபாயும் அளித்தார்.

விதிகளில் வளைவுகள், தோரணங்கள், பந்தல்கள் முதலிய பொறுப்புகளையெல்லாம், சேர்மன் வேணுகோபால் நாயுடு, மானேசர் ஐயாசாமி பிள்ளை ஆகியோர் அமைத்துத் தந்தனர். பல அன்பர்கள் பொருளுதவி, உடலுதவிகளைச் செய்தனர்.

‘சித்தாந்தம்' இதழை மீண்டும் தொடங்கி நடத்த வேண்டுமென வற்புறுத்தியபோது, பலர் அதன் உறுப்பினர் காப்பாளர்களாகக் கையொப்ப மிட்டனர். விழாவின் வரவேற்புக் கழகத்தவர்களும் முந்நூறு வெண் பொற்காசுகள் அளிப்பதாக உறுதி கூறினர்.

சுவாமிகளின் அயரா உழைப்பையும், சமாச வளர்ச்சிக்காக அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் பாராட்டிய வரவேற்புக் கழகத்தினர் முழுதும் பொற் கவசமிடப் பெற்ற பெளண்டன் பேனா ஒன்றினை அவர்கட்கு நினைவுக் குறியாக அளித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

வரவேற்புக் குழுவினருக்குச் சுவாமிகள் நன்றி கூறி யருளினார்கள்.

பொறுமைக்கோர் எடுத்துக்காட்டு :

இது முன்னாள் செயலர் கி. குப்புச்சாமி முதலியாருக்குப் பிடிக்கவில்லை. தன்னையன்றி நன்றியறிவிக்கச் சுவாமிகளுக்கு என்ன உரிமையிருக்கிறது? சமாசச் செயலரைக் கேட்காமல் செய்த இச்செயல் கண்டிக்கத்தக்கதாகும் என்றெல்லாம் பலரிடமும் கூறி, அன்றிரவு உணவு கொள்ள மறுத்துவிட்டார்.

மறுநாட் காலை, குப்புச்சாமி முதலியார் செய்கையை டாக்டர் - பாலவேலாயுதம் பிள்ளையவர்கள் சுவாமிகளிடம் விண்ணப்பித்துக் கொண்டார். அப்போது புகைப்படமெடுக்கும் பொருட்டு யாவரும் திரண்டிருந்தனர். குப்புச்சாமி முதலியாரும் அங்கிருந்தார். சுவாமிகள் போதிய காலமில்லாமையால் இச்செய்தி அறிவிக்கப்பெறாமல் போயிற்றென்றும், சமாசத்தின் முன்னேற்றங் கருதியே இவ்வாறு செய்யப்பெற்றதென்றும் எடுத்துக் கூறியும் முதலியார் தம் சீற்றத்தையே காட்டிக் கொண்டு பேசினார். அடிகளார் உடனே உள்ளே சென்று, ஓர் கடிதத்தை எடுத்துக் கொண்டுவந்து அனைவருக்கும் காட்டினர். அது பதினோரு ஆண்டுகட்கு முன் அடிகளாரின் திருமுகத்திற்கு