126
வல்லிக்கண்ணன்
புலிசையடைந்தவுடன் அடுத்து வரும் டிசம்பரில் தம் முயற்சியாலேயே சமாச ஆண்டுவிழாவை நடத்துவதெனத் திருவுளம்பற்றினர். புதுச்சேரியில் விழாவை நடத்துவதற்குப் பூரணாங் குப்பம் முனிசாமி முதலியாரும், கிரந்தே-சிவசங்கர செட்டியாரும் முன்வந்தனர். அங்ஙனமே அவ்விழா அடிகளாரின் தலைமையில் மூன்று நாள் நடைபெற்றது. 'சித்தாந்தம்’ இதழுக்குப் பல அன்பர்கள் ஆதரவளித்தார்கள். 1927 டிசம்பரில் நடைபெற்ற சமாசத்தின் இருபத்திரண்டாம் ஆண்டு விழா இதுவாகும்.
சைவப் பெரியார் மாநாடு :
1929-ஆம் ஆண்டு, சைவ சித்தாந்த மகா சமாசத்திற்குப் புத்துயிரளித்த ஆண்டாகும். மே மாதத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் சைவப் பெரியார் மாநாடு’ கூட்டப்பெற்றது. உயர்திரு மறைமலையடிகள் அக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கினார். செந்தமிழ் நாட்டிலுள்ள சைவ சபைகள் அத்தனையும் அந்த மாநாட்டிற்குத் தத்தம் பிரதிநிதிகளை அனுப்பிவைத்தன. பேரறிஞர் பலரும் திருப்பாதிரிப்புலியூரில் ஒருங்கு கூடினர். சைவ சமயத்தின் அடிப்படையான கொள்கைகள், செய்ய வேண்டிய சீர்த்திருத்தங்கள், அதன் வளர்ச்சிக்கேற்ற வழி வகைகள் ஆகிய எல்லாம் தனித்தனியே ஆராய்ந்து முடிவு செய்யப் பெற்றன. தமிழ்நாட்டில் இன்று, சைவம் வீறு கொண்டு தம் கடமைகளைச் செய்கிறதென்றால் அதற்கெல்லாம் வழி வகுத்துக் கொடுத்தது அம் மாநாடேயாகும்.
மாநாட்டின் முடிவைச் சமாசம் செயற்படுத்தியது :
சமாச வெளியீடாகப் பன்னிரு திருமுறைகள், சாத்திர நூல்கள், அருணகிரியார் திருப்புகழ் முதலிய நூல்கள் திருமுறுகாற்றுப்படை பெரியபுராணம் தோன்றக் காரணமாக இருந்த சீவக சிந்தாமணி முதலிய நூல்கள் வெளி வந்தன. யாவும் அடக்கவிலைப் பதிப்புகளே.
அம்மாநாட்டில் ‘சைவப் பஞ்சாங்கம்' வெளியிட்ட டாக்டர் இ. மு. சுப்பிரமணிய பிள்ளையவர்களுக்கு ரூபாய் நூறு பரிசளிக்கப் பெற்றது.
திருவெண்ணெய் நல்லூரில் :
1929 டிசம்பரில், சைவ சித்தாந்த மகா சமாஜம் திருவெண்ணெய் நல்லூரில், நல்லார் தொழும் வெண்ணெய்