134
வல்லிக்கண்ணன்
நிரம்பியவராய் மலரக் கூடுமாதலால் முதல் வகுப்பு முதல் 5 வகுப்புகள் தொடங்கப் பெற்றன. தம் மாணவருள் வீரசைவராய், அடுத்திருந்த வண்டிப்பாளையத்தை உறை விடமாகக் கொண்டவராய்ச் சிறந்த கல்வியறிவாற்றல்களும் ஒழுக்கமும் நிரம்பியவராய்ப் பயிற்சித் திறம் படைத்தவராய் விளங்கிய ம. உருத்திரசாமி ஐயரவர்களையே தலைமையாசிரியராக அமர்த் தினார்கள். திரு. முத்து இராசாக் கண்ணனார், திரு. பெரியத் தம்பிப் பிள்ளை, திரு. திருநாவுக்கரசு, திரு. மு. பழநி வேல், திரு. க. பா. வேல்முருகன் ஆகியவர் துணையாசிரியர்களாகப் பணி புரிந்தார்கள்.
மயிலம் - பொம்மபுர ஆதீனம் 18ஆம் பட்டத்துச் சிவஞான பாலயசுவாமிகள் தாம் பட்டமேற்ற காலத்திலிருந்து எண்ணி வந்த எண்ணத்தை - தமிழ்க் கல்லூரி நிறுவ வேண்டும் என்ற திருவுளத்தை ஞானியார் கலாசாலை தூண்டியது. அதன் விளைவாக அவர்கள் ஸ்ரீமத் சிவஞான பால்ய சுவாமிகள் தமிழ்க் கல்லூரியை 14-7-1938 ல் தோற்றுவித்தார்கள்.
அவர்களைப் பின்பற்றிப் பிற திருமடங்களும் தமிழ்க் கல்லூரிகளைத் தோற்றுவித்தன.
தாமே பாடம் படிப்பித்தல் :
அந்நாள் தொடங்கியே சுவாமிகள் தனியே தமிழ் கற்க விரும்புவோரனைவர்க்கும் தாமே நேரிற் பயிற்சியளித்துக் கல்லூரிகளுக்கனுப்புவதை மேற்கொண்டிருந்தனர். அவர்களது அறுபானாண்டு நிறைவு விழாவிற்குப்பின் அமைக்கப் பெற்ற ஞானியார் கலாசாலையிற் பயின்றவர் மிகப் பலர். அவர்களெல்லாம். இன்று ஆசிரியப் பணி பூண்டு சிறக்க வாழ்கின்றனர்.
தம் மாணவர் கற்றறிந்து புலவர் பட்டத்தேர்வில் தேர்ச்சி பெற்றாரென்றவுடன், தம்மிடம் பேரன்பு பூண்ட தகைமையாளர் எவரேனும் மடாலயத்திற்கு வருவரேல் அவர்களது ஆளுகைக்குக் கீழ்ப்பட்ட பள்ளிகளில் அவர்களையமர்த்துமாறு கூறி அவர்களைச் சிறக்க வாழவைத்தவர்கள் நம் அடிகளார். உடல் நலம் குன்றிய காரணத்தால் படுத்த படுக்கையாக இருந்த காலங்களிலும் தம்மன்பர் வர, அவர்கள்பால் தம் மாணவரைச் சுட்டிப் பயன் தருமாறு கூறிக் கருணை பாலித்த நிகழ்ச்சிகளும் உள. வேலை கிடைக்குமளவும் அத்தகையார்பால் இருந்து அவர்களது சில தகைமையான வேலைகளில் இருக்கச் செய்யவும், பின்னர் வேலையில் அமர்த்துமாறும் சில மாணவரையனுப்பிய நிகழ்ச்சிகளும் உள. ஆகவே, சுவாமிகள் செய்த அருஞ்செயல்