பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

141


திருவண்ணாமலைக் கோயிலில், புரவி மண்டபத்தின் கீழ்ப்புறத்துள்ளது. இக்கட்டிடம் ஜவுளி ந. சி. முனிசாமி முதலியாரவர்களால் கட்டப்பெற்றது. நவராத்திரி ஆறாம் நாளில் அவர் தன் பொருட்செலவில் அவ்விடத்தில் அடியார்கட்கு அன்னம் பாலித்து வந்தார். ஞானியார் சுவாமிகளின் தலை மாணவராம் ம. ரா. குமாரசாமிப் பிள்ளை ஒருமுறை அவ்விழாவுக்குச்சென்றபோது, ‘வசதியான இந்த இடத்தில் ஓர்சபை நிறுவி அதனைச் சிறப்பாக நடத்தலாமே என ஆலோசனை கூறினார். அங்ஙனமே சக்தி விலாச சபையும், அதன் அங்கமாக ஒரு நூல் நிலையமும் எழுந்தன. 19-5-1916ல் அதன் முதலாண்டு விழாத் தொடங்கி மூன்று தினங்கள் நடைபெற்றது.

கயப்பாக்கம் - சதாசிவ செட்டியார், மோசூர் - கந்தசாமி முதலியார், பொன்மார் - நடேச முதலியார், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், ச. சச்சிதானந்தம் பிள்ளை B.A., LT, மணிமங்கலம் திருநாவுக்கரசு முதலியார், ம. ரா. குமாரசாமிப் பிள்ளை, ஆண்டாளம்மையார், திரிசிரபுரம் இ. எஸ். இராமசாமி சாஸ்திரிகள், ஜி. வேங்கடராம அய்யர், கபாலி சாஸ்திரிகள், வேலூர் பெ. ச. இரத்தினவேல் முதலியார், எஸ். வி. விஜயராகவாசாரியார் ஆகியோர் சொற்பொழிவாற்றினர். சுவாமிகள் தலைமை தாங்கியருளினார்கள். முன்னுரை, முடிவுரைகள் அரிய நுண்பொருள் களமைந் தனவாய் யாவருள்ளத்தையும் கவர்ந்தன.

ஆங்கு அடிகளார் புரிந்த சொற்பெருக்கின் திறம் கண்ட செந்தமிழ்க் கவி கே.வி. இராமச்சந்திர ஐயர்,

முத்தியெங்கே ஞான முறையெங்கே முன்னோர்பால் பத்தியெங்கே யோதும் பனுவலெங்கே - இத்தரையில்
சான்றோர் பரவுகின்ற சண்முக மெய்ஞ் ஞானிநீ
தோன்றா திருப்பாயேற் சொல்‘

என்ற வெண்பாவினைப் புனைந்து கூறிச் சுவாமிகளின் கல்வியறிவின் திறம் வியந்து பேசினார்.

பின்னும் பன்முறை சுவாமிகள் அச்சபையின் விழாக்களுக்கென எழுந்தருளியது உண்டு. திருவண்ணாமலை தீபதரிசன காலங்களிலும்(பெருவிழாக் காலங்களில்) அங்கு நடைபெறும்