146
வல்லிக்கண்ணன்
வடக்குப்பட்டு த. சுப்பிரமணிய பிள்ளைய வர்கள்; அவர் குமாரர்கள், வ. சு. சண்முகம் பிள்ளையவர்கள், தணிகைமணி வ. சு. செங்கல்வராயப் பிள்ளையவர்கள்; டிப்டி கலெக்டர் ராஜாபாதர் முதலியாரவர்கள் முதலாயினோர் உத்தியோகத்திலிருந்து கொண்டு அன்பராக இருந்தாருட் சிலர்.
திரு.PT.இராசன், Bar at law. அவர்கள் திரு த. வே. உமாம கேசுவரம் பிள்ளையவர்கள், திரு T.M. நாராயணசாமிப் பிள்ளையவர்கள், திரு கோவைகிழார் என்னும் C.M. இராமச்சந் திர செட்டியாரவர்கள், திரு C.K. சுப்பிரமணிய முதலியாரவர்கள், மிட்டாதார் S.R. ஐராவத உடையாரவர்கள், வடமட்டம் ஜமீன் திருவேங்கடம் பிள்ளையவர்களையுள்ளிட்டார் பலர் கல்வியும் செல்வமும், செல்வாக்கும் பதவியும் பெற்றோருட் குறிப்பிடத் தக்கராவர்.
தஞ்சை கருணாநந்தர் வைத்தியசாலை, மு.ஆப்ரஹாம் பண்டிதர், புதுவை, லூய். சின்னையா ஞானப் பிரகாச முதலியார், ரெவரெண்டு. கிங் ஸ்பரி முதலாயினாருடன் சுவாமிகள் சிறந்த அன்பு பாராட்டி ஆண்டுதோறும் வாழ்த்துப்பா ஒன்றேனும் இயற்றி அச்சிட்டு அனுப்புவதுண்டு. மரபு, சமய வேறுபாடுகளைக் கடந்தவர் எம் சுவாமிகள் என்பதற்கு இத்தகையாரிடம் பாராட்டிய அன்பே ஆதாரம் ஆகும்.
சுவாமிகள், தென்னாட்டுத் திருத்தலங்களைத் தரிசிக்குமாறு திருவுளம் பற்றியருளிக் காளயுக்தி ஆண்டு கார்த்திகை மாதத்தில், சிவிகை யூர்ந்து எழுந்தருளினார்கள். மேனாவின் இருபுறமும் ம. ரா. குமாரசாமிப் பிள்ளையவர்களும், P.S. வடிவேல் செட்டியாவர்களும் நடந்தே மேனாவைப் பற்றிக் கொண்டு தொடர்ந்தார்கள். மடாலய முறையினையொட்டித் திருச் சின்னம் ஒன்று மட்டுமே முன் சென்றது. (ஆரவாரங் கூடாதெனக் கருதி ஏனையவற்றை அடிகளார் நிறுத்தி விட்டனர்)
திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), சிதம்பரம், திருநாரையூர், காட்டுமன்னார்கோயில், ஓமாம்புலியூர், கானாட்டு முள்ளுர், சீர்காழி, புள்ளிருக்கு வேளுர் (வைத்தீச்சுரன் கோயில்), மாயூரம், திருவாவடுதுறை, வடமட்டம், வேத மடம், திருநல்லம், திருவிழிமிழலை, திருமருகல், காரைக் கால், திருமலைராயன் பட்டினம், திருநள்ளாறு, நாகைப் பட்டினம், மஞ்சக் கொல்லை, (வேதாரணியம்) திருமறைக் காடு, குடவாசல், ஸ்ரீவாஞ்சியம்,