பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

147

குற்றாலம், திருவிடை மருதூர், திருநாகேச்சுரம், கும்பகோணம், கொட்டையூர், தாதம்பேட்டை, பழுர், இன்னம்பர், தஞ்சை, கருந்தட்டாங்குடி ஆம் தலங்களைத் தரிசித்தார்கள்.

சுவாமிகள், எழுந்தருள்வதறிந்த பலபல அன்பர்கள், தத்தம் ஊர்களிற் சொற்பொழி வாற்றுமாறு கேட்டுக் கொள்வதுண்டு. விரும்பினோர் விருப்பங்களை வேண்டியவாறே முற்றுவிக்குந் திருவருள் நிரம்பப் பெற்ற அடிகளார், அவ்வாறே அருளுரை வழங்கி, அன்பராயினார்க் கெல்லாம் ஆசி வழங்கியருளி வழிக்கொண்டார்கள். வடமட்டம் வேத மட நிகழ்ச்சியும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 7-8 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியும் அவர்களது வழி நடைக் காலங்களில் மேற்கொண்டனவேயாம்.

கரந்தை (தஞ்சை)யினின்றும் எழுந்தருளிய அடிகளார், திருக்கண்டியூர், திருவேதிகுடி, திருப்பூந்துருத்தி, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அடைஞ்சூர், இளங்காடு முதலாம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு திரிசிரபுரம் அடைந்தார்கள். முற்கூறியவாறே, சித்தார்த்தி ஆனி, 21உ திருச்சிச் சைவசிந் தாந்த சபை விழாவினைத் தலைமை தாங்கி நடத்தினார்கள். அந் நாளெல்லாம் தாயுமான தயாபரனையும், மட்டுவார் குழலாளையும் தரிசனம் செய்து கொண்டார்கள்.

பின்னர், அங்கிருந்து வழிக் கொண்டு, திருக்கற்குடி, பூவாளுர், திருத்தவத்துறை (லால்குடி), உறையூர், திருப்பாச் சிலாச்சிராமம், திருவானைக்கா, திருவரங்கம், அரசங்குடி, தென்னுர், புதுக் கோட்டை ஆம் தலங்களை யடைந்து சிவ தரிசனமும் திருமால் சேவையும் கொண்டருளிப் பலவான் குடியையடைந்தார்கள்.

பலவான்குடி மணிவாசக மன்றத்தின் ஆண்டு விழா, சித்தார்த்தி ஆவணி 20உயன்று, சுவாமிகளின் தலைமையில் மிகச் சிறப்புற நிகழ்ந்தது. சுவாமிகளருளிய தொடக்கவுரை முடிவுரைகள் மிக்க மேன்மை தருவனவாயமைந்தமை பற்றி மிகவும் போற்றப் பெற்றார்கள்.

வைரவன் கோவில், மேலைச் சிவபுரி, கீழைச் சிவபுரி, கோனாப்பட்டு, சொக்கலிங்கபுரம், இராமச்சந்திரபுரம், அரிமழம், அறந்தாங்கி, திருப்பெருந்துறை ஆம் தலங்களைத் தரிசித்துக் கொண்டு சித்தார்த்தி, கார்த்திகை 10உ காரைக் குடியை அடைந்தார்கள். காரைக்குடி நகரச் செட்டிமார் உபசரித்துச் சுவாமிகளின் சொல்லமுதமாந்திக் களித்துப்