பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

வல்லிக்கண்ணன்

எனவுங் கூறிவிட்டனர். அவ்வண்ணமே வேலூருக்கு வந்து மருத்துவரிடம் காட்டப் பெற்றது. அங்கு X-Ray வழியாக முரிவினைக் கூர்ந்து கவனித்த மருத்துவர், எலும்பு முரிந்து ஒன்றன்மேல் ஒன்றாக ஏறி நிற்பதையறிந்து இது ஒருக்காலும் கூடாதெனவும், காலை முரிந்த பகுதிக்குமேல் நீக்கி எடுத்துவிட்டால் உயிர் பிழைக்கக் கூடுமெனவும் தெரிவித்து, அவ்வாறு செய்துவிடலாமா? என்றபோது அடிகளார், ‘முருகன் செயல் அங்ஙனம் ஊறுபட்ட நிலையில் இருக்க விடாது. ஆகவே, பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று கூறி முரிபட்ட காலுடன் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தனர். உடனே எலும்பு முரிவுத் தனி வைத்தியர் வருவிக்கப் பெற்றார். அவர் புத்தூரினர், தனக்கேயுரிய வைத்தியம் செய்தனர்.

சுவாமிகளோ தம்பிரதம குருமூர்த்திகளை இடைவிடாது தியானம் செய்தும், ஆறுமகப் பரம் பொருளை வேண்டிக் கொண்டும் வைத்தியர் கூறியவாறே இருந்தார்கள். குருவருள் கூட்டுவித்தது. சில மாதங்களில், கட்டையூன்றி நடக்கத் தொடங்கினார்கள். பின்னும் சில மாதங்கள் கடந்த பின் கோலூன்றி நடந்தும், கால் ஊனம் சிறிது மின்றிப் பழைமை போலாகி நடக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கால் ஊனமின்றித் திருவருள் பாலித்தருளுமாறு தம் ஆதீன முதற்குரவரை வேண்டிப் பாடப்பெற்ற வெண்பாக்கள் பல. அவற்றுள் 49 கிடைத்தன. அவை இப்புத்தகத்திற் பிற்சேர்க்கையாக இணைக்கப் பெற்றுள்ளன. அவை, படுக்கையிலிருந்த்வாறே சில காகிதங்களில் அவ்வப்போது சுவாமிகளால் எழுதப் பெற்றவை 'குரு துதி' எனும் பெயரின.

இந்த நிகழ்ச்சியில் ஓர்சிறப்பு என்ன வெனில், வேலூர் உலகப் புகழ்பெற்ற மருத்துவமனையில் எலும்பு, நரம்பு தனிப் பிரிவின் மருத்துவர்கள் ஆராய்ந்து, இவ்வெலும்பு கூடவே வாய்ப்பில்லை; ஒன்றன் மேல் மற்றொன்று ஏறிக்கொண்டது. காலைத் துண்டித்தால் தான் உயிர்பிழைக்கலாம்; இல்லை யெனிற் சில நாளுக்குள் புரையோடி, உயிர்க்கே தீங்கு நேரும் எனக் கூறிய பிறகும் அடிகளார் குருநாதன், முருகன் மீது கொண்ட அடங்காத பக்தியால் சுகம் பெற்றார்கள் என்பதேயாகும்.

இவ்வாறு நலம் பெற்ற பிறகு, திருவண்ணாமலையை நடந்தே வலம் வரவேண்டுமெனச் சுவாமிகள் திருவுளம் கொண்டருளினார்கள். 1934ல் , எழுந்தருளியபோது, 8 மைல்