தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
159
தலைமைப் பணியை யாற்றிவிட்டுப் பற்பல இடங்களிலும் தொண்டு செய்து திருக்கோவலூர் மீண்டு கொண்டிருந்த சுவாமிகளுக்கு வயிற்றுப்போக்கு வந்துற்றது. கண்விழிப்பு, காலந்தவறிய உணவு, கவனித்து வேளை தவறாமல் உணவு முதலிய நல்ல முறையில் அளிக்கப் பெறாமை, இடையறாத பணி ஆகியவையே அதற்குக் காரணமாயின. இடைவழியில் வயிற்றுப் போக்கு நேர்ந்ததால், போகிகள், தம் துன்பம் பொருட்படுத்தாதவராய் இரவோடிரவாக நடைகொண்டு, அதிகாலை 5 மணியளவில் திருக்கோவலூர் மடாலயத்திற் சேர்ப்பித்தனர். அப்போது சுவாமிகள் உடம்பிற் சூடில்லை. மிகவும் தளர்ந்த நிலையில் பேசவும் இயலாத நிலையிலிருந்தனர். உடனே டாக்டர் வருவிக்கப் பெற்றார் . அவர் மருந்து கொடுத்து வயிற்றுப் போக்கை நிறுத்தி, சூடுஉடலிலும் வரப்பெற்றார்கள். சில தினங்கள் கடந்தபின் உடல்நலம் பெற்றது. சுவாமிகள், சமயம் வாய்த்த போதெல்லாம் டாக்டர் துரைசாமி முதலியாரின் அருஞ்செயலைப் போற்றி நன்றி பாராட்டுவார்கள்.
தனக்கென வாழாமை :
‘உடலினை யான் இருந்து ஒம்புகின்றேனே’ என்றும், ‘உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்றும் கூறிய திருமந்திரங்களில் உடலின் அருமையும் அதனைப் போற்றும் முறைகளும் கூறப்பட்டுள்ளனவேனும், நம் சுவாமிகள் தம் உடலைப் பேணுவதிற் கருத்துச் செலுத்தாதவர்களாய், பிறர் உயிரை - ’பிறர் உடம்பினுள் உத்தமனைக் காண’த் தக்க பேரொளியை வளர்த்துக்கொண்டே நாடெங்கணும் பவனி வந்தார்கள்.
திருப்பாதிரிப்புலியூரில் தங்கியிருந்த காலங்களில் மட்டுமல்லாது, சென்ற சென்ற இடங்களிலெல்லாம் எந்த நேரத்தில் எவர்வேண்டினும் அவருக்குப் போதிப்பதிலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பார்கள். இந்தத் தகைமை எவரிடங்காண இயலும்?
"..,. கடவுட் பக்தியும் சிறப்பாக முருகப் பெரு மானிடத்துப் பேரன்பும் உடையவர்கள் கல்வியறிவு டையோரை நன்கு மதித்து அளவளாவும் இளிய குணம் உடையவர்கள். தமிழ்மொழியில் பேரார்வத்தையும் சைவ சமயப் பற்றையும்தமிழ் மக்களுக்கு விளைத்து வந்த இவர்கள் அரிய சொற்பொழிவுகள், இத் தமிழபு நாட்டில் நிகழாத இடம்