தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
163
பண்டை நாளில் மடங்களோடு ஆலயங்களைச் சீரிய முறையில் நடத்தும் பொறுப்பும் மடாதிபதிகளுக்கு இயைவிக்கப் பெற்றன. அவர்களும் நன்குபேணி வளர்த்துச் சீரிய தொண்டு பல புரிவர். இடைக்கால நிலைவேறுபட்ட காரணத்தால் தோன்றியதே இந்து அறநிலையக் கழகம். சில காலம் 1935 முதலாம் ஆண்டுகள் என நினைவு. அக் கழகத்தின் தலைவராகத் திருச்சி திருவாளர் T.M. நாராயணசாமிப்பிள்ளை, MA, B.L., அவர்கள் தலைமைப் பதவியிலிருந்தார்கள். கோவை திரு. C.M. இராமச்சந்திர செட்டியார் (கோவைகிழார்) B.A., B.L., அவர்கள் ஆணையராக இருந்தார்கள் அவ்விருவரும் சமய வளர்ச்சிக்காம் அரும் பணிகளைக் குறித்துச் சுவாமிகளிடம் அடிக்கடி வந்து கலந்துரையாடுவார்கள். அவர்களுக்குச் சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியனவே ஆலயங்களுக்கு ஆணை மூலம் அறிவிக்கப் பெற்றன. அவற்றுட் சில :
1. அந்தந்தத் தல தேவார - பிரபந்தப் பாக்களைக் கூடியவரை ஆலயச் சுவர்களில் எழுதிவைத்தல். அவையில்லாத ஆலயங்களில் பொருத்தமுள்ள பாடல்களை எழுதி வைத்தல்.
2. தலத் தொடர்பான நிகழ்ச்சிகளையும், பொதுவான சமய நிகழ்ச்சிகளையும் சொற்பொழிவு, கதை முதலிய வாயிலாக மக்களிடையே சமயப்பணிகளைப் புரிதல்.
3. அந்தந்தத் தல வரலாறு அந்தந்தக் கோயிலில் எழுதப் பெற்றோ அச்சிடப் பெற்றோ போற்றி வைக்கப் பெறல். அது கழக ஒப்புதல் பெற்றிருத்தல் சிறப்பு.
4. திருமுறைகள் - பிரபந்தப் பாக்களைப் பூசைவேளைகளில் முறையோடு பாடச் செய்தல்.
5. விழாக் காலங்களில் சமயச் சொற்பொழிவு முதலாயவை அமைத்துச் சமயப் பிரசாரம் புரிதல்.
6. சமயப் பிரசாரங்கள் கோயில்களிலும், மடங்களிலும் அவ்வவற்றின் சார்பில் நடத்துதல் - முதலியனவாம்.
மேற்கூறப் பெற்றவாறெல்லாம் திருப்பாதிரிப்புலியூர் ஆலயத்தில் நடைமுறையிற் கொண்டுவரலும் பிற இன்றியமையாத பணிகளும் சுவாமிகள் தலைமையில் மேற்கொள்ளல், ஆலய முன்னேற்றத்தால் மக்கள் முன்னேற்றத்திற்கு வழியாகுமெனக்