164
வல்லிக்கண்ணன்
கருதினர் பலர். சுவாமிகளை தருமகர்த்தராக்க முனைந்தனர். அடிகளாரும் ஒப்புக் கொண்டார்கள். 1936-37ஆம் ஆண்டுகளில் அவர்கள் தலைமையில் திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கோயிலில் பலவகைப் பணிகள் நிறைவேற்றப் பெற்றன.
1. மின் விளக்குகள் அமைக்கப் பெற்றுத் தொடர்பு பெறப்பெற்றது.
2. திருக்கோயில் வெளிச் சுற்றின் தென்பாலும், மேற்பாலும் திருமதில் அமைத்துத் திருநந்தனவனம் அமைக்கப் பெற்றது. (முன்னைத் திருப்பணியாளரால் தம் சொந்தப் பொறுப்பில் அமைக்கப் பெற்றுப் புஷ்ப கைங்கரியம் நடைபெற்று வந்ததுண்டு. 1929-க்குப் பிறகு அவர்களது சொத்துகள் பிறர் வயப்பட்டபோது அதுவும் பிறருடையதாயிற்று. அதனால், கோயிலில் பூக்களை வாங்கியே பயன்படுத்தும் நிலையிலிருந்தது.)
3. திருமண முதலிய காலங்களில் வருவாயாக வந்த பொன் முதலியவை அவர்களுடைய சிறந்த மாணவராம் அரங்கைய பத்தரவர்கள் மூலம் திருவாபரணங்களாக்கப் பெற்றன.
4. கூடியவரை செலவுகளைச் சுருக்கிப் புதிய வருவாய்களுக்கு வழிகோலப் பெற்றன.
1936,37 ஆண்டுப் பெருவிழாக்களுக்கு வேண்டிய பொருள்களை எந்தக் கடைக்காரர் எந்தப்பொருளைக் குறைந்த விலைக்குக் கொடுக்க முன் வருகிறாரோ, அவரிடம் அப்பொருள்களை வாங்கச் செய்தார்கள் - அதற்கு முன், ஒரு கடைக்காரர் யாவும் கொடுத்து விட்டு அவர் குறிப்பிட்ட விலைப்படியே பணம் பெற்று வந்தமை நிறுத்தப் பட்டது.
5. கொடியேற்றத்திற்கு முன் அமாவாசையிரவு, எல்லைக் காப்பு காரணமாகப் பலி சோறிறைக்கும் வழக்கம் உண்டு. அதற்கென உயிர்ப்பலி கொடுக்கப் பெற்று வந்தமை நிறுத்தப் பெற்றது. பூசணிக்காய் பலியிடும் வழக்கம் நடை முறைக்கு வந்தது.
6. கோயிற் கணக்குகளை ஒழுங்கு படுத்திச் சிறந்த முறையில் கணக்குகள் வைக்கப் பெற்றன.
7. விழாக் காலங்களில் ஆலயச் சார்பில் ஆலயத்திலேயே சமயச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப் பெற்றன. 1936-ல், பெருவிழா நிகழ்ச்சி அச்சிடப் பெற்றது. சங்க இலக்கியங்களிலும் தோத்திர நூல்களிலும் காணப்படும் விழாப்