பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

வல்லிக்கண்ணன்

யிலிருந்தபோது, புறமுதுகில் கட்டி தோன்றியதால் துன்புற்றார். ஆரணியிலிருந்து சுவாமிகள் அவரைக் காணும் நோக்கத்துடன் திருக்கோவலூர் மீண்டு எழுந்தருளும்போது, திருவண்ணாமலை சேர்ந்தபோதே ம. ரா. கு. இறைவனடியடைந்து விட்ட செய்தி சுவாமிகளுக்கு அறிவிக்கப்பெற்றது.

அடிகளார் மனங்கலங்கிக் கண்ணீரும் பெருக்கினர். திருக்கோவலூர் எழுந்தருளி மாணவர் குடும்பத்தவரிடம் பரிவுரை கூறியவுடன், ஆங்குத் தங்கியிருக்கப் பொறாராய்த் திருப்பாதிரிப்புலியூர் மீண்டருளினார்கள் வந்த சில நாள்களுக்குள் சுவாமிகளுக்கும் அவ்வாறே புறமுதுகிற் கட்டி தோன்றித் துன்புறுத்தியது, திருவருளும் குருவருளும் நலம் தந்தன.

புலிசை மடாலயம் திரு. ப. கந்தசாமி அய்யரவர்கள். இவர்களே பின் ஆறாங் குருநாதராகப் பட்டத்தி லெழுந்தருளியிருந்தவர்கள். திரு. ப. ஆறுமுக அய்யர், சோழ வல்லி- திரு. ப. பால சுந்தர நாயனார், தோட்டப்பட்டு-திரு. முத்துகிருஷ்ண ரெட்டியார், திரு. மு. சா. முத்து கிருஷ்ண அய்யர், காஞ்சிபுரம் திரு. சிவஸ்வாமி தேசிகர், கூடலூர் திரு. வடிவேல் செட்டியார், திருச்சி திரு. மு. நடேச முதலியார், திருவெண்ணெய் நல்லூர் திரு. வடிவேல் முதலியார், வண்டிப்பாளையம் திரு. பாலகிருஷ்ண முதலியார், தோணி-கந்தசாமி முதலியார், புலிசை-திரு. ஆ. பா. அரங்கைய பத்தர், திரு. ஆ. இரத்தினவேற் பிள்ளை, திரு. ஆ. இராஜேசுவரம் பிள்ளை, திரு. மு. நடராஜ தேசிகர், திரு. டாக்டர் இராமலிங்க செட்டியார் என்னும் பாப்பைய செட்டியார், வண்டிப்பாளையம் - திரு. ம. உருத்திர சாமி அய்யர், திரு. பாலசுப்பிரமணிய தேசிகர், திரு. பொ. இரத் தினசபாபதி முதலியார், திருக்கண்டேசுவரம்- திரு. T. M. ஜம்புலிங்க முதலியார், திருத்தினைநகர்-திரு. தம்புசாமி நாயுடு, வெள்ளையூர்-திரு. V.J. சொக்கலிங்க உடையார், திருவருணை-திரு. இரத்தினசபாபதி ஐயர், கோவல் வீரட்டானம் - திரு. துரைசாமி அய்யர், சென்னை திரு. துரைசாமி அய்யர், புதுவை - திரு. வீ. துரைசாமி முதலியார், புதுப்பேட்டை - திரு. சிவசிதம்பர செட்டியார், சிதம்பரம்-திரு.முத்தையா, முதலியார், பண்ணுருட்டி - திரு. இராஜகோபால் செட்டியார், காட்டுமன்னார்கோயில் - பண்டிட், P. மாணிக்கம் பிள்ளை, திரு. சங்கரய்யர் இவர்கள் பழைய மாணவராவர்.

ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையிற் பயின்று பின் வித்துவான் பட்டம் பெற்றவர்கள்: