பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

வல்லிக்கண்ணன்

4. சுவாமிகள் நுண்ணிய பொருள்களை விளக்குமிடத்தும் பிறாண்டும் எளிய உவமைகளைத் துணையாகக் கொள்ளும் பேராற்றலுடையவர்கள். சிலர் எளிய பொருள்களை விளக்கப் புகுந்துழி சிக்கலான உவமைகளை எடுத்துக் காட்ட முயன்று இடர்ப்படுவர். கண்ட உருவத்தைக் கொண்டு காணாத கடவுளையறிகிறயவன் புத்திசாலியென்று சுவாமிகள் கூறுவதுண்டு. இதற்குவமையாகப் பள்ளிக்கூடத்தில் இரண்டு பிள்ளைகளுள் பழகிய மாணவன் "ட" என்ற எழுத்தைப் பார்த்ததும் "ட" என்ற ஒலியை உச்சரிப்பதையும், பழகாத புதிய மாணவன் ஒருவன் அவ்வொலியை உச்சரிக்கமாட்டாது அவ்வெழுத்தைப் பார்த்து அது ஒரு கோடு என்பதையும் எடுத்துக்காட்டி, கோடு என்று எண்ணுவது பொய்யல்ல ஆனால் தாழ்ந்த அறிவுநிலை யென்றும், கண்ட எழுத்தைக் கொண்டு கண்ணுக்குப் புலப்படாது காதுக்கே புலப்படும் ஒலியைறிவதே உயர்ந்த அறிவுநிலையென்றும், இவ்வாறே திருக்கோயிலிலும் உருவங்களைக் கல்லென்றும் செம்பென்றும் நினைப்பது தாழ்ந்த நிலையென்றும் கடவுளென்று தொழுவது உயர்ந்த நிலையென்றும் சுவாமிகள் மிகத் திறமையாக விளக்குவதைக் கேட்பவர் உள்ளம் கேட்குந் தோறும் பூரிக்கும். மும்மலங்களினுண்மைக்கு "அவன் ஆணவம் பிடித்துத் திரிகிறான்" "அவன் கருமம் அவனை விடுகிறதா", "அவன் மாயையிலே மூழ்கிக் கிடக்கிறான்" என்று தமிழ்நாட்டுக் கிழவிகளும் கூறும் பழக்கத்தைச் சுவாமிகள் சுட்டிக் காட்டுவதை நாம் பன்முறை கேட்டின்புற்றுள்ளோம். -

5. சுவாமிகள் உபந்நியாசங்களில் அவ்வப்போது நகைச்சுவை பொருந்தப் பேசுவதையும் நாம் மறத்த லாகாது. சிலர் நகைச்சுவைக்கென்றே முயன்று வேண்டாத கிளைக் கதைகளை வருவித்துக் கொண்டு வீணாகப் பொழுது போகிறதே! யென்று அறிஞர்கள் நினைக்கும்படி செய்வதுண்டு. சுவாமிகளுடையை முறை அத்தகையதல்ல. தாழ்ந்த அருவ்ருப்பான பொருள்களை அறவே விடுத்துக் கற்பூரத்தில் தீப்பற்றுவதுபோல்புத்தி கூர்மைமிக்கவர்கள் சடுதியிற் பற்றி இன்புறக்கூடியவைகளாகவே சுவாமிகளுடைய நகைச்சுவை மொழிகள் மிளிரும். இவற்றைக் கோவையாக்கி ஒரு நூல் வெளியிடலாம். தாலிபுலாக நியாயமாக ஈண்டு ஒன்றே கூற விரும்புகிறேன். அஷ்ட புஷ்பங்களுள் ஒன்று பாதிரி. இதில் சிவப்புப் பாதிரி,