பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வல்லிக்கண்ணன்

பண்டிதமணி கதிரேசம் செட்டியார், மறைமலையடிகளார், கா. சுப்பிரமணியப் பிள்ளை, ந.மு.வேங்கட சாமிநாட்டார் , உலகநாதம்பிள்ளை, கரந்தை கவியரசு வெங்கடாசலம் என்று அறிஞர் பெருமக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

1. மறந்தும் புறந்தொழாமை - 2. சிவபுரம் சுடரையே எண்ணுதல்

இந்த இரண்டு கொள்கைகளும் வீரசைவ மரபினரின் உயிர்மூச்சான கொள்கைகளாகும். இப்படிப்பட்ட கொள்கைகளை உண்மையில் மரபு மாறாமல் நம் அடிகளார் கடைப்பிடிப்பவர் தாம் என்றாலும், பிற சமயங்களையோ, தெய்வங்களையோ பழிமொழிகளால் தூற்றமாட்டார். சமயப் பொறுமையில் நின்று விளங்கினார். எடுத்துக்காட்டாக ஒன்று காண்போம். ஒரு சமயம் திருப்பாதிரிப்புலியூரை அடுத்து 2 கல் தொலைவிலுள்ள திருவந்திரபுரத்திற்கு நம் சுவாமிகள் சென்றார். திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற அத்தலத்து வைணவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க திருப்பாவை முதல் பாட்டின் விளக்க வுரையை, வைணவ பரிபாஷையில் நீண்ட நேரம் சொற்பொழி வாற்றினார். வியப்பால் மகிழ்ந்த வைணவர்கள் சுவாமிகளுக்கு மூவுருவே ஓர்ருவாய்க் காட்சி தரும் தேவ நாதப்பெருமான் அணிந்திருந்த நீண்ட பெருமாலையை அணிவித்துப் பாராட்டினர் என்ற செய்தி இந்நூலின் 87வது பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதுபோலவே திருவரங்கத்திலும் அடிகளார் வைணவ பரிபாஷையில் சொற்பொழிவாற்றிப் பாராட்டப்பட்டுள்ளார். இதுகொண்டு இவரது சமய சமரசம் அறியப்படுகிறது. அன்றியும் இவர் சில தனவந்தர்களான அறிஞர்களின் வேண்டுகோளின்படி இராமாயணம், சீதாகல்யாணம் போன்ற தலைப்புகளில் சொற்பொழிவாற்றிப் பலருடைய பாராட்டுகளையும் பெற்றுள்ளார். மற்றும் சுவாமிகள் தெய்வத்தொடர்பாகவே சொற்பொழிவாற்றினாலும், தமிழ் மொழியின் ஏற்றம் பற்றிக் குறிப்பிட மறக்கமாட்டார்கள். தமிழிலக்கணங்களில் ஆங்காங்கு காணப்பெறும் சொல்லினிமை, பொருளினிமைகளைச் சுவைபட எடுத்துப் பேசுவதில் அவர்கட்கு இணை யாவார்எவருமிலர். சைவமும்தமிழுமே அவருக்கு மூச்சுக்காற்று.

முருகபக்தி

அடிகளார் முருகப்பெருமானிடம் அளவிலா பக்தியுடையவர். முருகா! முருகா! என்றே அவர் நா இயம்பிக் கொண்டிருக்கும். சைவமும் தமிழும் அவருக்கு இரண்டு