பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

34


தமிழ்நாட்டில் நடைபெறும் சமயவாதிகளின் சமய அறிவையும் அவர்கள் நாள்தோறும் சமயச் சண்டை நிகழ்த்தும் முறையையும் குறிப்பிட்ட கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்

“இதெல்லாம் பொதுவாக நாம் பார்த்திருக்கும் விஷயங்கள். ஆனால் விதிவிலக்காக சைவத்திலும் வைணவத்திலும் சில பெரியார்கள் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே சமய தத்துவங்களை உணர்ந்தவர்கள்; சமய வாழ்க்கை நடத்துபவர்கள். இப்படி விதிவிலக்காயுள்ள சமயப் பெரியார்களுக்குச் சிறந்த உதாரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீஞானியார் சுவாமிகளைத்தான் குறிப்பிட வேண்டும்”

அடிகளின் உருவத்தோற்றத்தைப் பார்த்ததுமே “இதோ ஒரு பெரியார் இருக்கிறார்” என்னும் உணர்ச்சி நமக்கு உண்டாகும். அவருடைய வாய்மொழியைக் கேட்டு அவருடைய பெருமை மேலும் மேலும் நமக்குப் புலனாகும். “அன்பே சிவமாய் அமர்ந்திருக்கும் பெரியார் இவரல்லவா? என்று எண்ணி எண்ணி வியப்போம்” என்று குறிப்பிட்டுள்ளமையை நோக்கி உணரலாம்.

ஞானியாரடிகள் பன்மொழிப் புலவர். புலமை தோன்றப் பேசுவது வேறு; மொழிவன்மை தோன்றப் பேசுவதும் வேறு. சுவாமிகள் மொழிக்காழ்ப்பு இல்லாமல் பேசும் திறன் கொண்டவர்கள். கேட்பவர் பலதிறத்தவராக இருப்பார்கள். பலமொழியினராக இருப்பார்கள். அவரவர்தம் தகுதிக்கேற்பப் பல்வேறு கட்டங்களில் சாதாரணச்செய்தி முதல் ஆய்வுச் செய்தி வரையில் அடுக்கடுக்காக வரிசைப் படுத்திக் கூறும் ஆற்றல் அடிகளுக்கு மட்டுமே உண்டு. காரணம் அவர் தம் பேச்சானது அன்பையும் கருணையையும் ஆர்வத்தையும் அடிப்படையாகக் கொண்டது. சமுதாய வளர்ச்சிக்காகவே தொண்டாற்றினார். எம்முடைய கடவுளை அடையவேண்டும் வாருங்கள் என அழைப்பதாக அவர் பேசுவதில்லை.

“சமய வாழ்க்கையை இந்தச் சமுதாயம் பெற வேண்டும் என்பதும் சமுதாயம் சிறப்பதற்காகவே சமய வாழ்வு அமைய வேண்டும் என்பதும் அதற்குத் தொண்டு ஒன்றே தலைமையான கருவி” என்பதும் ஆயமூவகை உண்மைகளை உணர்ந்தும் உணர்த்தியும் தொண்டாற்றிய காரணத்தால் புலிசைத்