உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ் வளர்த்த ஞானியாரடிகள் !
சின்னகுத்துசி

1910இல் வெளிவந்த ‘அபிதான சிந்தாமணி’ என்ற நூலில் - தமிழ்நாட்டில் சைவமும் தமிழும் வளர்க்கத் தோற்றுவிக்கப்பட்ட மடங்கள் 18 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆதீனங்களின் சொத்து விபரம் பற்றி "சைவ ஆதீனங்கள்" என்ற தலைப்பில் ஊரன் அடிகள் எழுதிய நூலின் முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“முற்காலத்தில் முடியுடை மூவேந்தர்கள் தமிழையும் கலைகளையும் வளர்த்தார்கள். பிற்காலத்தில் குறுநில மன்னர்களும் ஆதீன கர்த்தர்களும் வளர்த்தார்கள். ஆதீனங்களுக்கு அரசர்கள் ஏராளமான நிலக்கொடைகளை அளித்ததே அறம் வளர்ப்பதற்காகதான். அறம் வளர்ப்பதோடு மொழி, கலை பண்பாடுகளையும் ஆதீனங்கள் வளர்த்தன ஆதீனங்கள் பெரிய சமஸ்தானங்கள் போன்றவை. இராமநாதபுரம் புதுக்கோட்டை சமஸ்தானங்கள் போன்று திருவாவடுதுறை தருமபுரம் ஆதீனங்கள் மிகப்பெரிய சமய நிறுவனங்கள். திருவாவடுதுறைக்குத் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 20 பெரிய கோயில்கள், தருமபுரத்துக்கு 27 கோயில்கள், மடத்துச் சொத்தை 12 ஆயிரம் வேலி நிலங்கள் என்று குறிப்பிடுவதுண்டு. ஒரு வேலி ஏறத்தாழ 6 ஏக்கர். 12 ஆயிரம் வேலி 72,000 ஏக்கர் ஆகும். தருமபுர ஆதீனத்துக்குக் கோயில் சொத்து மிகுதி; திருவாடுதுறை ஆதீனத்துக்கு மடத்துச் சொத்து மிகுதி"

- என்கிறார் ஊரன் அடிகள்.

அபிதான சிந்தாமணியை அடியொற்றி - ஊரன் அடிகள் சைவத்திருமடங்கள் 18 என்று பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார். இந்த 18 மடங்களில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளின் - திருக்கோவலூர் மடத்தின் பெயர் இல்லை. எனினும் என்ன?

சைவத் திருமடங்கள் 18 என்று அபிதான சிந்தாமணி பட்டியலிட்டுக் காட்டுவதற்கு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோவலூர் மடத்தின் ஆதீன கர்த்தராகப் பட்டம் சூட்டப்பட்ட ஞானியாரடிகள், ஓர் அரை நூற்றாண்டுக் காலத்துக்கு - நிலங்களும் - கோவில்களும் - சொத்துக்களும் ஏராளமாய்க் கொண்ட மடங்களின் ஆதீன கர்த்தர்கள் எல்லாம்