பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானயாடிகள்

17

வசதிகள்-ரயில் வசதிகள்-பஸ் வசதிகள் இன்று போல இல்லாத அந்தக் காலத்தில்-பல்லக்கில் அமர்ந்தே பயணம் செய்து தமிழ் வளர்த்தார் அவர்; சைவம் தழைத்தோங்கப் பாடுபட்டார்.

இந்த விஷயத்தில் தந்தை பெரியார் அவர்களும் ஞானியாரடிகளும் ஒன்று !

தமது வாழ் நாள் முழுவதும் சுற்றுப்பயணம். சுற்றுப் பயணம் என்று - தமிழகத்தின் சின்னஞ்சிறு குக்கிராமங்களைக் கூட விட்டு வைக்காமல்-ஒரே நாளில் இரண்டு ஊர்கள். மூன்று ஊர்கள் என்று கூட ஊர்ஊராகச் சென்று பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த பெரியார் போலவே ஞானியாரடிகளும் - சிவிகை (பல்லக்கு) மூலமே தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து தமிழ்ப்பணியும் - சமயப் பணியும் ஆற்றிவந்தார். பல்லக்கு மூலமே பயணித்து - தமிழுக்காகவும் - சைவ சமய வளர்ச்சிக்காகவும் அவர் ஆற்றிய பணிகளை- சுந்தர சண்முகனார் தமது நூலில் பட்டியலிட்டுக்காட்டி இருக்கிறார்.

1901 இல் மதுரைத் தமிழ்ச் சங்கம் ஒன்று ஆரம்பிக்கிறது. ஞானியாரடிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவரது பணியினைப் பெற்ற அமைப்புகளின் பட்டியல் வாணி விலாச சபை (திருப்பாதிரிப்புலியூர்), சைவ சித்தாந்த மகாசமாசம், ஞானியார் மாணவர் கழகம் (திருக்கோவலூர்), பக்த பால சமாசம்(மணம் பூண்டி), கம்பர் கானாமிர்த சங்கம் (திருவெண்ணெய் நல்லூர்), வாகீச பக்த சனசபை (நெல்லிக்குப்பம்), கலைமகள் கழகம் (புதுக்சேரி), புதுவைச் செந்தமிழ்ப் பிரகாச சபை, ஞானியார் சங்கம் (காஞ்சிபுரம்), சன்மார்க்க சபை (கடலூர்), சைவ சித்தாந்த சபை (உத்திரமேரூர்), சமய அபிவிருத்தி சங்கம் (செங்கல்பட்டு), சக்தி விலாச சபை (திருவண்ணாமலை) என்று அடிகளாரால் உருவாக்கப்பட்ட அல்லது அடிகளாரின் பங்கும் பணியும் பெற்ற அமைப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இன்று மடாதிபதிகள் இந்து சமயத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் சிலர் இந்து மதப்பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் தமிழ் என்று வந்தால் அது ஆலயத்துக்குகந்த மொழியல்ல; இசைமேடைகளுக்குரிய மொழி அல்ல என்றும், ஆலயத்துக்குள்ளே மட்டுமல்ல; வெளியே குடமுழுக்கு செய்யும் இடத்தில் கூட தமிழ்வரக்கூடாது என்று வடமொழி வெறியோடு செயல்படுவதைக் காண்கிறோம்!

ஞானியாரடிகள் சைவ சமயம் வளர்க்க உருவாக்கப்பட்ட மடத்தின் ஆதீனகர்த்தர்தான். ஆனால் அவர் வைணவத் திருத்-