தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
49
மறுமையிலேனும் அடைவதற்குச் சமைவது சமயம். ஆகவே தத்தினும் சமயத்துக்கு ஒழுக்கமும் நோன்பும் மிக வேண்டும் என்பார் பாவாணர்.
ஞானியாரடிகள் வள்ளலாரைப் போல பாடல்களை இயற்றவில்லை. நூல்களை எழுதவில்லை. மக்களைச் சந்தித்தார். மக்களிடையே பேசினார். அவர்களின் பலம், பலவீனங்களை உணர்ந்து அவர்களைத் தேற்றினார். பசித்தோர்க்கு உணவும், கல்வி கற்க வருவோர்க்குத் தகுந்த ஏற்பாடுகளும் செய்தார். ஞானியார் வீர சைவர். அவர்களுக்கு என்று முறைகளும் ம்ரபுகளும் உண்டு. சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வணங்குபவர். அவர் மட்டுமே இறைவனைப் போற்றி வணங்கி முறைகளையும், மரபுகளையும் பின்பற்றி துவராடை அணிந்து துறவியாக வாழ்ந்து மறைந்து விடுவதில் ஞானியாரடிகள் பேரின்பம் கண்டார் இல்லை. இவரது சமய வாழ்வு அனைத்து தமிழ் மக்களையும் ஒருங்கிணைப்பதாக அமைந்தது.
மேலும் தமிழகத்தில் சமய வாழ்வு என்பது முழுமுதற் கடவுள் தன்மை உடையதாக மக்களால் போற்றப்படவும் வணங்கப்படவும் இல்லை. உட்பிரிவுகளும் சிறுதெய்வ வணக்கங்களும் மலிந்துள்ள நிலையில் ஞானியார் மேற்கொண்ட பிரச்சாரம் சமூக வாழ்வில் ஒரு தேவையை உணர்த்தக் கூடியதாய் அமைந்திருந்தது. அவரிடம் சைவர், வைணவர், இதர உட்பிரிவினர் பிற மதத்தார் எனப் பேதங்காட்டும் படியான செயல்களில் அவர் இறங்கினார் இல்லை. அதற்காக அவர்தமது அடையாளத்தையும் இழக்கவில்லை. வீரசைவ மரபையும் மக்கள் மீது திணிக்கவும் இல்லை. அவரும் இறுக்கமாகவும் இல்லை.
ஞானியாரடிகளுக்குக் கிடைத்த வாய்ப்பைக் கொண்டு தமிழர்களைச் சமயத்தின் பெயரால் அவர் கற்ற தமிழால் திரட்டினார். அதற்காக அவர்கற்ற கல்வியையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஞானியாரடிகளின் சொற்பொழிவுகளைக் கேட்ட அறிஞர் பெருமக்கள் சமயச்சார்பான அவரது விரிவுரையைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்தும், கேட்டோர் சிந்தைச் சிலிர்ப்பு எய்தியதையும் அறிந்து கொள்ள முடிகிறது.
ஞானியாரடிகளின் பதிவான சொற்பொழிவுகளைப் படித்துப் பார்க்கிறபோது அறுசமயங்கள் தொடர்பாக நமக்கு இருக்கும் அறியாமை போக்கப்படுகிறது. ஆனால் அதேசமயம்