என்பது அவர் புனைந்து எழுதி வைத்துவிட்டுச் சென்ற வெண்பா ஆகும்.
அடுத்த நாள் ஆசிரியர் வழக்கம் போல வந்து நோட்டைப் பிரித்துப் பார்த்தார். அவர் பாட்டெழுதியிருந்த பக்கத்தின் அடையாளம் போல, பத்து ரூபாய் நோட்டு ஒன்றை அடிகள் வைத்திருந்ததைக் கண்டார். உடனே ஞானியாரடிகளைப் பார்த்து ‘நான்பாட்டுக்கு (என் மனம் போனபடி) எழுதி வைத்தேன். உண்மையில் பணம் பெற வேண்டும் என்று இப்பாடலை எழுதிவைக்க வில்லை என்று ஆசிரியர் கூறினார்.
அதற்கு அடிகள் நான் பாட்டுக்குத் தான் (பாடலுக்குத் தான்) பொருள் கொடுத்தேனேயல்லாமல் வேறொன்றிற்காகவுமல்ல என்று சிலேடையாகப் பொருள் வரும்படி சொன்னார்.
இந்த சிலேடை நயத்தை வியந்து நா.பா. பாடலின் பொருளைக் கூறி, இருவர் பேச்சிலும் அமைந்திருந்த சிலேடைப் பொருளை விளக்கிக் கூறினார். அவருடைய பேச்சு இன்றும் என் செவிகளில் ஒலித்து நா.பா.வின் பேச்சாற்றலை நினைவுபடுத்துகிறது.
தீபம் நா.பா. அவர்கள் 1987ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13ம் நான் மறைந்தார். அவர் ஆற்றிய தற்கால இலக்கிய பணியை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளில் கடந்த 15 ஆண்டுகளாக ஞானியாரடிகள் தமிழ் மன்றத்தின் வாயிலாக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் ஞானியாரடிகள் பற்றி ஓர் வாரப் பத்திரிகையில், ஞானியாரடிகள் பிறந்த குலத்தைப் பற்றி ஓர் தவறான செய்தி வெளிவந்தது. மடம்வெளியிட்ட நூற்றாண்டு மலரிலிருந்து (1973) ஆதாரத்துடன் மறுப்புக் கடிதம் எழுதி அப்பத்திரிகைக்கு அனுப்பினேன். இந்நிகழ்ச்சி ஞானியாரடிகள் பற்றி ஓர் ஆய்வு நரல் வெளியிடவேண்டும் என்ற எண்ணத்திற்கு மேலும் வலுசேர்த்தது.
ஞானியாரடிகள் தமிழ்மன்றத்தின் சார்பில் “தீபம் யுகம்” நூல் வெளியீட்டு விழாவில் திரு. ஜெயகாந்தன் ஞானியாரடிகள் பற்றி விரிவாகப் பேசினார். அவரது தாய்மாமா ஞானியாரடிகளிடம் பாடம் படித்தார் என்று செய்தியைக் குறிப்பிட்டார். அவரும் கடலூரில் தனது சிறிய வயதில் ஞானியாரடிகள் பார்த்ததை நினைவு கூர்ந்தார்.