72
வல்லிக்கண்ணன்
வாழ்க்கையில் உள்ள எத்தனையோ அம்சங்கள் வந்து தெளிவுபட்டு ஓடின. ஒவ்வொன்றும் உணர்ச்சி ததும்பியதாய் இருந்தது; வாழ்க்கையோடு ஒட்டிய உண்மையாகவே இருந்தது. நம்முடைய மனசு அங்கங்கே திளைத்து நிற்கும்; அந்த விஷயம் முடிந்ததும், பெருக்கெடுத்துப்போகும் பெரிய விஷயத்தோடு இலகுவாகக் கலந்துகொள்ளும்.
கடவுளுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை எடுத்துச் சொல்லும்போது, சுவாமிகள்,
"விறகில் தீயினன்;
பாலிற்படு நெய்போல்
மறைந்து நின்றுளன்
மாமணிச் சோதியன்;
உறவு கோல்நட்(டு)
உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக்
கடையமுன் நிற்குமே!“
என்ற தனிக்குறுந்தொகைச் செய்யுளை எடுத்தாள நேர்ந்தது. பலர் இந்தச் செய்யுளை உணர்ச்சி யாதொன்றும் இல்லாமல் கையாண்ட காரணத்தால், சாமானியமாகவும் இளைத்ததாகவும் தோன்றியது செய்யுள். ஆனால், சுவாமிகள் அதன் உண்மையில் திளைத்து ஆர்வத்தோடு விளக்கிக் காட்டின மாத்திரத்தில், முன் காணாத உண்மைகளும் உணர்ச்சியும் பாடலில்ப் பொதிந்து கிடப்பதாகப் புலப்பட்டது. நமக்கும் கடவுளுக்கும் உறவாவது, கடவுளுடனேயே ஒன்றியிருக்கிறோம். நாம், வேறாகத் தனித்து நிற்கவில்லை என்ற உண்மை தான். இந்த உண்மையைச் சதா மனசில் வைத்து ஆர்வத்தோடும் ஆனந்தத்தோடும் சிந்திப் போமானால், மறைந்து நின்றுள்ள மாமணிச் சோதியான் முன்னின்றுவிடும்“ என்று விஷயத்தைக் கூட்டி முடித்தபோது, சபையோருக்கு அந்த அற்புத தரிசனமே கிடைத்த மாதிரியான ஒரு உணர்ச்சி உண்டாயிற்று. எல்லோரும் ஒரே ஆனந்த பரவசத்தில் மூழ்கினார்கள். ஆகா, இதையெல்லாம் கேட்டு அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லையே’ என்று சபைக்கு வராதவர்களை எண்ணிப் பரிதவிக்க வேண்டியதாய் இருந்தது.
அதோடு, தமிழை ஆர்வத்தோடு கற்று வந்தவர்களுக்கு ஒரு வகையில் அவமானமும் வருத்தமும் ஏற்பட்டது என்று சொல்ல வேண்டும். ஏதோ தமிழறிஞர்களை யெல்லாம் தமிழுலகம் அறிந்திருக்கிறது, மதித்திருக்கிறது என்று எண்ணிக்