உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

73

கொண்டிருந்தோமே, சுவாமிகளை இதுவரை அறிந்திராதது போகட்டும்; அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டது கூடக் கிடையாதே என்று அவமானந்தான், வருந்தந்தான்.

ஆம், தமிழனுடைய ஜாதகமே அப்படி. நம்மிடம் உயர்ந்த பொருள்கள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றையெல்லாம் மதிக்கத் தெரியாமல், ஒன்று மில்லாத படோடோபத்தை, முக்கியமாக, தனக்கு விளங்காத காரியத்தைக் கண்டு மோகித்த வண்ணமாயிருக்கிறானே என்றெல்லாம் நொந்து கொள்ள நேர்ந்தது.

ஆனாலும், கருவூலத்தைக் கண்டு விட்டோம் என்ற ஆனந்தத்துக்குக் குறைவில்லை. திருநெல்வேலிப் பிரசங்கம் நல்ல முகூர்த்தத்தில் நடந்தது என்று சொல்ல வேண்டும்.

தொடர்ந்து பத்து நாளுக்கு மேலாகவே திருநெல்வேலியில் பிரசங்கம் நடந்தது. கேட்க வந்தவர்களின் தொகை அதிகரித்ததால், வசந்த மண்டபத்தை விட்டு மேலப் பிராகாரத்தில் பிரசங்கத்தை நடத்த நேர்ந்தது.

பிறகு நாகர்கோயில், அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோயில் முதலான இடங்களுக்குப் போய், பிரசங்கங்கள் செய்தார்கள். அதன்பின், தமிழ்நாடெங்குமே பிரயாணம் செய்து, தமிழ் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு இன்னதென்று விளக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

சமய நூலைக் கற்று வந்தவர்களுக்கு, அதன் உள்ளான தத்துவம் இன்னதென்று தெரியவும் அதில் ஆர்வம் கொள்ளவும் ஏற்பட்டது.

லாந்தல்க் கல்லுகளை வெறும் மாடு கட்டுங்கல் என்று எண்ணும் மனப்பாங்கு போய், உண்மை ஒளியைத் தரக் கூடிய மிகவும் உபயோகமான தீப ஸ்தம்பம் என்று மதிக்கிற காலம் வந்து விட்டது.

இதெல்லாம் நேர் நேரான உண்மையென்று தெரியவரும். திருப்பாதிரிப்புலியூர் மடத்துக்குப் போய்ப் பார்த்தால்; காலையிலிருந்து இரவு பத்து மணி நேரம்வரை வந்து பாடங் கேட்கும் மாணவர்களைப் பார்த்தால் தெரியவரும். உத்தியோகஸ்தர்கள், பென்ஷன் பெற்ற உத்தியோகஸ்தர்கள், சஷ்டியப்த பூர்த்தியாகிச் சதாபிஷேகத்துக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கும் கிழவர்கள் ஆகிய பலர் வந்து சமய சம்பந்தமாகவும் தமிழ் இலக்கிய சம்பந்தமாகவும் பாடங்கேட்டுக் கொண்டிருப்பார்கள். உண்மையான உணர்ச்சியோடு, சுவாமிகள் விஷயங்களையும் நூல்களையும் விளக்கிக் காட்டுவதால்தான் மேலே சொன்ன