80
வல்லிக்கண்ணன்
சிவமயம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க
திருக்கயிலாய பரம்பரைத் திருக்கோவலூரா தீனம்
திருப்பாதிரிப்புலியூர்
ஸ்ரீமத் ஞானியார் மடாலய ஐந்தாங் குருநாதர்
வரலாறு
தோற்றுவாய் உலகில் மக்கள் மக்களாக வாழ வேண்டும். ஆனால் அப்படி வாழ்வது எல்லோர்க்கும் இயலாததாகி விடுகிறது. மாக்களாக வாழ்வாரே பலராகின்றனர். இத்தகைய இரு வேறுபட்ட உலகத்தியற்கை, இன்று நேற்றுத் தோன்றியதன்று. உலகம் என்று தோன்றிற்றோ, அன்றே தோன்றியதாதல் வேண்டும். மிகப் பழைய நூல்களிலும் மாக்களாக வாழ்ந்தோர் சிலரின் குறிப்புகள் காணப் பெறுகின்றன. செவியறிவுறுஉ என்னும் புறத்திலக்கணத் துறை எழுந்தது மாக்களை மக்களாக்குதற்கே. ஏமரா மன்னன் வாழ்ந்திருந்த துண்டென வள்ளுவத்தாலறிகிறோம். ஆராயாது முறை புரிதல் முதலாகிய தவறு காரணமாகக் கேடுற்ற மன்னர் வரலாறுகள் பல, சங்க இலக்கியங்களிலும், பழம் பெரும் காப்பியங்களிலும் வழங்கக் காண்கிறோம். ஆகவே, மக்கள் மாக்களாக வாழாமல் மக்களாக வாழச் செய்வதற்குக் கற்றறிந்தோர் பற்பல துறைகளிலும் முயன்று வந்திருக்கின்றனரென்பது வெளிப்படை.
அவல வாழ்வும் அமர வாழ்வும் அறியாமையிருளில் மூழ்கிக் கண்ட பொருளையெல்லாம் இச்சித்து அவற்றைத் துய்ப்பதற்கே இந்தப் பிறவி தமக்கு வாய்த்திருக்கிற் தென் றெண்ணுவோர் பலர். இதனால்தான், புலனடக்கம் பற்றி எல்லா நீதி நூல்களிலும் வற்புறத்தப்பெறுகிறது சான்றோர் பலரும், மக்களாக வாழ வழி வகுத்தனர். அவர், முதற்கண் தாம் தூயவாழ்வு நெறி நின்றனர். தாம் கண்டறிந்த உண்மைகளைச் சொல்லளவில் விட்டுவிடாமல், இயற்றமிழ்ப் பாக்களாகவே புனைந்து அளித்திருக்கின்றனர். அவை காலம் மாறுபடினும் தாம் மாறா இயல்பின. நீதி நூல்களை இயற்றி யோர் மட்டுமின்றி, இறைநெறி நின்றோரும் அவ்வகையே நம்மை