ஞானியாரடிகள் வெளியிட்டுப் பேசிய பேச்சுப்பற்றியும், அதற்கு தந்தை பெரியார் ஆற்றிய பதில் உரையும் இதில் இடம் பெற்றுள்ளனர். இவ்வுரைகள்தான் இப்புத்தகத்தின் பின் பக்க அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. “குடி அரக” முதல் இதழுக்காக ஓர் ஆய்வு நரல் எழுதி வெளியிடப்பட்டிருக்கிறது. அது இராசாங்கம் அவர்களின் விமர்சன ஆற்றலை நன்கு வெளிப்படுத்துகிறது. தமிழில் விமர்சனக் கலை வளர்ச்சியின் ஆழத்திற்கு சான்றாகத் திகழ்கின்ற க. நா. சு., தி. க. சிவசங்கரன் போன்றவர்களுடன் முருகு இராசாங்கத்தையும் இணைத்துக்கொள்ளலாம். தமிழ் மொழி வளர்ச்சிக்கு இலக்கியம் படித்தபிறகு இலக்கணம் படிப்பதா அல்லது இலக்கணம் படித்த பிறகு இலக்கியம் படிப்பதா என்பது மொழி நூல் அறிஞர்களின் விமர்சனத்திற்கு இன்றும் ஆட்பட்டு வருகின்றது. மொழிப்புலமை வேண்டுமானால் சொல்லாட்சி திறன் வேண்டும். நடைமுறையில் சென்ற நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் வாழும், வாழ்ந்த தமிழ்ச் சான்றோர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. இது மேலும் வளர வேண்டும். இக்கட்டுரைத் தொகுப்பானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு வகை செய்ய மீண்டும் ஓர் ஞானியாரடிகள் போன்ற தமிழ் நாற்றங்காலுக்கு உரமாக அமைய வேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகும்.
இந்நாலின் முகப்பு ஓவியத்தையும், பின்பக்க அட்டை ஓவியத்தையும் அமைத்திட இனாமாக உழைப்பை நல்கிய பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட, இனிய நண்பருக்கு என் நன்றி உரியது. கட்டுரைகளைப் பெற்றுமுறைப்படுத்தி செம்மைப் படுத்தி பதிப்பித்த மூத்த தமிழ்அறிஞர் வல்லிக்கண்ணன் ஐயாவுக்கும் சிவத்திரு ஞானியாரடிகள் வரலாற்று நூலை இக்கட்டுரைத் தொகுப்பில் இணைத்துக் கொள்வதற்கு இசைவை வழங்கிய திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகள் மடாலயத்தின் எட்டாம் குருநாதராக அருளாட்சி செய்யும் அடிகளுக்கும், ஒளி அச்சுக்கோப்பு செய்த சுகன் கம்ப்யூட்டர் சிஸ்ட்டத்தார்க்கும், நூலை தயாரித்து அளித்த ராஜ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அ. நா. பாலகிருஷ்ணன்
சென்னை-2.