தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
89
சாதகப்பலன் சில :
குருவாரம், வைகாசி மூலம் இவை நற்பலன் தந்தன.
இலக்கினத்தில் சந்திரனும் இரண்டில் சனியும், ஐந்தில் புதனும் சுக்கிரனும், ஆறில் சூரியனும் இராகுவும், ஒன்பதில் குருவும், பதினொன்றில் செவ்வாயும், பனிரண்டில் கேதுவும் அமைந்த ஜாதம்.
ஜனன காலத்தில் கேதுதிசை ஆரம்பம்.
ஜாதகச் சிறப்பு : பத்தா மிடத்ததிபதியான புதனும் பதினோராமிடத்து அதிபதியான சுக்கிரனும் புத்தி ஸ்தானமாகிய ஐந்தாமிடத்தில் திரிகோணமேறி நிற்றலானும் ஜன்மாதிபதி குரு, ஒன்பதாமிடமாகிய மற்றொரு திரிகோணத்தில் நிற்றலானும் சுவாமி, ஞான குருவாய்ப் புகழ் பெற்று ஒளிர்ந்தார்கள்,
(மேற்கண்ட சாதகம், இந்த சாதகர் திருக்கரத்தால் எழுதப் பெற்று வைத்திருந்த குறிப்பின் படியாகும்.)
உபதேச அளவில் நில்லாமல், தாமும் மோட்ச சாதனத்தில் ஈடுபட்டு, அங்கலிங்க சம்பந்த முடையவர்களாகச் சிவ பூசை முதலாய சிறந்த ஒழுக்க சீலர்களாய்த் திகழ்ந்து மோட்ச மெய்தினார்கள். இது, மோட்ச காரகனாகிய கேது, மோட்ச ஸ்தானமாகிய பன்னிரண்டாமிடத்தில் நிற்றலால் உணரப் பெறுகிறது. .
பதினேழாம் வயதில், சுக்கிரதசை, குரு புக்தியில் (20-1-89) விரோதியாண்டு கார்த்திகை 7௳ வியாழன் சித்திரை நட்சத்திரத்தில் அவர்கள் மடாலயத் தலைமை யேற்றருளினார்கள்.
பிள்ளைப்பருவம் : அண்ணாமலை ஐயரும், பார்வதியம்மையும் தம் குழந்தையின் ஜாதகம் கணித்துப் பார்த்து