92
வல்லிக்கண்ணன்
சிவபுராணம், திரு அகவல்கள், திருமுருகாற்றுப்படை, கந்தர்கலி வெண்பா முதலியவற்றினை மனத்துள் தூய்மையுடன் ஓதுதல் வழக்கம். பிறகே முன் குறிப்பிட்டவாறு நீராடல் முதலிய செய்து காலைச் சிற்றுண்டி கொண்டு, பள்ளி சென்று விடுவார்கள்.
மாலை, பள்ளி முடிந்து திரும்பியபின், பள்ளியிற் பயின்றன வற்றையும், அடுத்தநாள் நடக்க வேண்டியவற்றையும்படித்துச் சிந்தனையில் இருத்திக் கொள்வதும், இயன்ற வரை சிறிது விளையாடுதலும், விளையாடுங் காலத்தில் படித்தவைகளையும், ஆசிரியர் போதனை காலத்திற் குறிப்பிடும் பற்பல இன்றியமையாச் செய்திகளையும் நினைவிற் கொள்ளலுமே யன்றிப் பிறவற்றிற் சிந்தை செல்லா வண்ணம் கருத்துடன் பயில்வார்கள்.
அவர்களது திருவுடலைப் பிடித்துவிடல், ஆங்கு இருப்போர் சிலர்க்கே கிடைக்கக் கூடிய நல் வாய்ப்பு. அக்காலை அவர்கள் பற்பல அருளுரைகளை, அறிவுரைகளைக் கூறுவார்கள். தாம் பயின்ற காலங்களில் மேற் கொண்ட நியதிகளையும், ஐயங்களை அகற்றிக் கொண்டமையும் முதலிய தம் அநுபவங்களை யெல்லாம் கூறியருள்வார்கள். அவர்கள் கூறுவன வற்றில் பாடத் தொடர்பான செய்திகளும், அறிவுரைகளும், நிரம்பியிருக்கும். அவர்கள் அங்ஙனம் கூறியவற்றைப் பின்பற்றியோர் பெரு நலமடைந்த துண்டு. எடுத்துக்காட்டாக ஓர்நிகழ்ச்சியைக் குறிப்பிட முனைதல் இழுக்காகாது.
ஒரு நிகழ்ச்சி: திருவையாற்றுத் தமிழ்க் கல்லூரியில் 1934 - 38 நான்காண்டுகள் பயின்றவர் ஒருவர். அவர் சுவாமிகளால் அமைக்கப் பெற்ற ஸ்ரீமத் - ஞானியார் கலா சாலையில் வித்துவான் - புகுமுகத் தேர்விற்குப் பயின்றவர். திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்தவர். தேர்வில் முதன்மை பெறும் நோக்குடன் முனைந்து படிப்பதில் ஈடுபட்டார். ஆனால் படித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே, 'கூகூ' என இறைவதும், ஆடைகளைக் குலைத்துக் கொண்டு ஓடுதலுமாக மூளைக்கோளாறு கொண்ட நிலையில் திருப்பியனுப்பப் பெற்றார். அவர் திருப்பாதிரிப்புலியூரடைந்து மருத்துவம் பெற்றார். தனக்கு வழிகாட்டியருளிய குருநாதரை நாடோறும் வந்து பணிவார். அவர்க்குக் கூறிய அறிவுரை-