பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12. புராணம் போற்றும் தில்லை

தில்லைத் தலத்தின் பழமையையும் பெருமையையும் சொல்லும் புராணங்கள் பல. அவற்றுள் கோயிற் புராணம், சிதம்பர புராணம், புலியூர்ப் புராணம் முதலியவை சிறப்பாகக் குறிப்பிடத் தக்கனவாகும். இவற்றுள் உமாபதி சிவனரால் பாடப்பெற்ற கோயிற் புராணம் தனிச் சிறப்புடையதாகும்.

புராணம் பாடிய புனிதர்

உமாபதிசிவனர் சைவ சமய சந்தான குரவர் நால்வருள் ஒருவர். அவர் தில்லைவாழ் அந்தணருள்ளும் ஒருவர் ; சைவ சமய சாத்திரங்கள் பதினான்கனுள் எட்டு நூல்களைத் தந்தருளிய செந்தமிழ்ச் சிவஞானச் செல்வர் ; மற்றாெரு சந்தான குரவராகிய மறைஞான சம்பந்தரின் மாளுக்கர். தில்லைக் கூத்தன் அருளான பெற்றுப் பெத்தான் சாம்பான் என்னும் புலேக்குலத் தொண்டர்க்கு முத்திப்பேறு கிடைக்கச்செய்த சித்தர். முள்ளிச்செடிக்கும் முன்னவன் இன்னருள் வாய்க்கு மாறு செய்த வள்ளலாவர். அவர் இயற்றிய கோயிற் புராணம் கூறும் தல வரலாற்றை நோக்கலாம்.

புராணம் புகலும் கதை

ஒரு காலத்தில் இறைவன் விண்ணவரின் வேண்டு கோளுக்கிணங்கித் தாருக வன முனிவர்களின் செருக்கை யடக்குவதற்காக காதாந்த நடனம் ஆடினர். அவ் ஆட்டத்தில் இறைவனது இயக்கமாகிய படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களும் அமைந்திருந்தன. இத்தகைய திருக்