பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புராணம் போற்றும் தில்லை

95


புலிக்கால் முனிவருடன் நட்புக்கொண்டு திருமூலட்டானேசுவரரைத் தொழுது வழிபாடு செய்து வந்தார். தில்லையின் மேல்பால் நாகசேரி யென்னும் தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் க்ரையில் ஒரு சிவலிங்கத்தையும் அமைத்து, இறைவன் திருக்கூத்தைக் காணும் பெரு விருப்புடன் எதிர்நோக்கியிருந்தார்.

தில்லையில் இறைவன் திருக்கூத்தை நிகழ்த்த வந்தான். அங்கிருந்த காளி தடுத்துத் தன்னுடன் போட்டிக்கு இறைவனே அழைத்தாள். இறைவன் ஊர்த்துவத் தாண்டவத்தால் அவளது செருக்கை யடக்கித் ‘தில்லையின் வடபால் அமர்க!’ என அருள் செய்தான். அவள் தில்லைக்காளியாக நகரின் வடக் கெல்லையில் தங்கினாள். இன்றும் தில்லைக்காளியின் கோயில் சிறப்புற்று விளங்குகிறது. இறைவன் காளியுடன் ஆடிய ஊர்த்துவத் தாண்டவத்தைப் பதஞ்சலியும் வியாக்கிரபாதரும் தரிசித்து இன்புற்றனர். அவ்ர்கள் வேண்டுகோளுக்கிணங்கிய இறைவன் தில்லைமாநகரில் கூத்தப்பெருமாகை என்றும் குளிர்ந்த காட்சியருளுகின்றான்.