பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தில்லைத் திருக்கோவில்

101


மேற்குக் கோபுரம்

மேற்கு இராச கோபுரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் முதலாம் சடாவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பெற்றதெனப் பல கல்வெட்டுக்கள் பகர்கின்றன. இதிலும் நாட்டியச் சிற்பங்கள் பல காணப் படுகின்றன. கோபுரத்தின் வெளிநிலையில் அமைந்துள்ள முருகன் திருக்கோவிலும் கற்பக விநாயகர், திருக்கோவிலும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்தவை.

வடக்குக் கோபுரம்

வடக்கு இராச கோபுரம் விசயநகர மன்னரான கிருட்டிணதேவராயரால் கட்டப்பெற்றது. அவர், தாம்பெற்ற ஒரிசா வெற்றியின் அறிகுறியாகச் சிற்றம் பலவனை வழிபட்டு இதனைக் கட்டி மகிழ்ந்தார். இது கி. பி. 1516 ல் கட்டப்பெற்றதெனக் கல்வெட்டுக்கள் சொல்லுகின்றன. இக் கோபுர வாயில் நிலைப்புரை யொன்றில் கிருட்டிணதேவராயரின் உருவச் சிலையொன்று காணப்படுகிறது. இதிலும் பரத நாட்டியச் சிறப்பை விளக்கும் பல சிற்பங்கள் உள்ளன.

தெற்குக் கோபுரம்

தெற்கு இராச கோபுரம் எழுநிலை மாடங்களை யுடையது. இது பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற் பகுதியில் கட்டப்பெற்றது. இதனைக் கட்டியவன்; சொக்கச்சியன் என்ற முதற் கோப்பெருஞ் சிங்க வைான். அதனால் இக் கோபுரத்தைச் சொக்கச்சியன் எழுங்கலக் கோபுரம் என்று சொல்லுவர். இதில் இரண்டு கயல் உருவங்கள் காணப்படுகின்றன, அவற்றைக்கொண்டு இது சுந்தரபாண்டியளுல் கட்டப் பெற்றதென்பர் சிலர். கோப்பெருஞ்சிங்கன் இதனைக்