பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழ் வளர்த்த நகரங்கள்


கட்டிய காலத்தில் பாண்டியருக்கு அடங்கிய குறுகில மன்னகை இருந்தான் என்பதையே அக் கயல்கள் விளக்குவனவாகும். இதன் வெளி நிலைகளிற் காணப்படும் அர்த்த காரீசுவரர், திரிபுராந்தகர், மகிடாசுரமர்தனி, பிச்சாடனர் முதலிய திருவுருவங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடையன.

பாண்டிய நாயகம்

இத் திருக்கோவிலின் வடமேற்கு மூலையில் வடக்குக் கோபுரத்திற்கு அணித்தாகப் ‘பாண்டிய காயகம்’ என்னும் கோயில் அமைந்துள்ளது. இது மாறவர்மன் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பெற்றது. தேரைப்போன்ற வடிவுடன் உருளைகள் மாட்டப் பெற்று, யானைகள் பூட்டி இழுப்பதுபோன்று அமைக்கப்பெற்ற அரியதொரு மண்டபம் இது. இதன் கண் ஆறுமுகப்பெருமான் மயில்மீது அமர்ந்து, வள்ளி தெய்வயானையுடன் காட்சியளிக்கிறார். ஆறுமுகப் பெருமான் திருவுருவம் சிறந்த வேலைப்பாடுடையது. மண்டபத்தின் உட்புறமெங்கும் திருமுருகாற்றுப் படையில் கூறப்பெறும் ஆறு படைவீடுகளின் காட்சிகள் மிகவும் அழகான வண்ண ஒவியங்களாகக் காண்பவர் கண்ணைக் கவர்கின்றன.

திருத்தொண்டத்தொகையிச்சரம்

இங்குள்ள சிவகங்கையின் வடகரையில் கவலிங்கக் கோயில் அமைந்துள்ளது. பெரிய புராணத்தில் பேசப் பெறும் தொகையடியார்கள் ஒன்பதின்மரையும் ஒன்பது சிவலிங்க வடிவங்களாக அமைத்து வணங்கும் தலம் இது என்பர். இதனைத் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்றும் குறிப்பர்.