பக்கம்:தமிழ் வளர்த்த நகரங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங்களில் தில்லை

105


அம்பலத்தே கண்டேன், வேதங்கள் தொமுதேத்தும் விளக்கமான தில்லையில் கண்டேன்’ என்று கரடிப் பாடிப் பரவசமெய்துகிறார்.

திருக்கோவையாரில் தில்லை

தில்லைக்கூத்தனைத் தரிசித்துத் தென்பால் திரும்பிய மாணிக்கவாசகரின் கண்களில் தில்லைக்கோவிந்தன் பள்ளி கொண்டிருக்கும் காட்சி தென்பட்டது. இத் திருமாலுக்கு இங்கென்ன வேலை தில்லைமுற்றத்திலேயே பாயலை விரித்துப் படுத்துவிட்டானே, என்ன காரணம்? என்று சிறிதே சிந்தித்தார். காரணம் கருத்தில் உதித்து விட்டது. உடனே அதனை எல்லோரும் அறியச் சொல்லிப் போக்தார். ‘ஒருகால் திருமால் சிவபெருமான் திருவடியினைக் காணுதற்காகப் பன்றியுருவெடுத்து நிலத்தைப் பிளந்து கெடுந்துாரம் சென்றான்; அவன் திருவடியைக் கண்டுகொள்ள முடிய வில்லை ; பின் தன் செருக்கழிந்து சிவனை, அருளுக என்று பணிந்து வேண்டினன்; அப்போது சிவன் ஒரடியை மட்டுமே காட்டினான் ; மற்றாென்றைக் காட்டாது மறைத்துவிட்டான்; காணாத மற்றாென்றையும் கண்டு செல்ல வேண்டும் என்ற கருத்தினால் தில்லை முற்றத்திலே கடுந்தவம் புரிந்துகொண்டிருக்கிறான்’ என்றார்.

‘புரங்கடங் தான்அடி காண்பான்
புவிவிண்டு புக்கறியா(து)
இரங்கிடெக் தாய் ! என் றிரப்பத்தன்
ஈரடிக்(கு) என்னிரண்டு
கரங்கள்தந் தான் ஒன்று காட்ட, மற்
றங்கதும் காட்டிடென்று
வரங்கிடங் தான்தில்லை யம்பல
முன்றில்அம் மாயவனே!’